மதுபோதையில் வாகனம் ஓட்டிய 57 பேருக்கு அபராதம்
வேலூர், அக்.13- வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மது போதையில் வாகன ஓட்டிய 57 பேருக்கு போலீசார் ரூ 3.50லட்சம் அபராதம் விதித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இதற்காக மது போதை வாகன ஓட்டி களை அடையாளம் காணும் வகையில் ‘பிரீத் அன லைசர்’ என்ற கருவி போக்கு வரத்து போலீசாரிடம் வழங்கப்பட்டுள்ளது. இக்கருவியை பயன்படுத்தி மது போதையில் வரும் வாகன ஓட்டிகள் கண்டறியப் பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படு கிறது. அதன்படி கடந்த செப்.1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஒரு மாத காலத்தில் வேலூர் மாவட்டத்தில் 57 போதை வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டு அவர்களின் வாக னங்கள் கைப்பற்றப்
பட்டுள்ளன. தங்கம் விலை கிடுகிடு உயர்வு
சென்னை, அக்.13- சென்னையில் ஆப ரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும், ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,640க்கு விற்பனையானது. ஆப ரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,580க்கு விற்பனை செய்யப்படு கிறது.இதேபோல், வெள்ளி யின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.197க்கு விற்பனை செய்யப்படுகிறது.