மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை
கடலூர், அக்.19- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம் திட்டக்குடியில் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் கழுதூர் அருகே அரியநாச்சி கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவரின் வயலில் மக்கா சோளம் பயிர் களையெடுப்பு பணி செய்து கொண்டிருந்த கழுதூர் கிராமத்தை சேர்ந்த பாரிஜாதம், கணிதா, சின்னப்பொண்ணு ஆகிய மூன்று விவசாய தொழிலாளர்களும் நில உரிமையாளர் ராஜேஸ்வரி ஆகிய பெண்கள் மீது இடிதாக்கியதில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். தவமணி என்கிற பெண் கண் பார்வை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை யில் உள்ளார். லாரி மீது இடி தாக்கிய தில் ஓட்டுனர், கிளீனர் இருவரும் படுகாய மடைந்து சிகிச்சை பெறுகின்றனர். மாநில அரசு இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தருவதாக அறிவித் துள்ளது. சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பங்களுக்கு மாநில அரசு 10 லட்சம் ரூபாய் தந்தது. விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் இடிதாக்கி இறந்துள்ளனர். குடும்பத் தலைவியை இழந்து தவிக்கும் விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு மாநில அரசு வழங்கிட வேண்டும். படுகாயமுற்றவர்களுக் கும் நிவாரணம் வழங்கிட வேண்டும் . பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டிற்கு ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கிட வேண்டும் என வலி யுறுத்தி திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் . ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் எஸ். பிரகாஷ், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.கே.சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டக்குடி வட்ட செயலாளர் வி.அன்பழகன், தவிச வட்டச் செயலாளர் பி.அரவிந்தன், மாவட்ட குழு உறுப்பினர் முத்துலட்சுமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்ட னர்.
