தமிழக காடுகளில் 3170 யானைகள்
சென்னை, அக். 8 - வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் வனத்துறைக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள காட்டு யானைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மே 2025-இல் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பயிற்சி யின் முடிவுகளின்படி தமிழ்நாட்டில் இப்போது 3,170 காட்டு யானைகள் வசிப்பது தெரியவந்துள்ளது. இது 2024-ஆம் ஆண்டு கணக் கெடுப்பில் இருந்த 3,063 என்ற எண்ணிக்கையை விட 107 யானைகள் அதிகமாகும். தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது தமிழ்நாட்டின் யானை பாதுகாப்பு முயற்சிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். கர்நாடகாவுடன் இணைந்து மே 23 முதல் 25, 2025 வரை மூன்று நாட்கள் இந்த ஒருங்கிணைந்த கணக் கெடுப்பை தமிழ்நாடு மேற்கொண் டது. மொத்தம் 8,989.63 சதுர கி.மீ பரப்பளவிலான யானை வாழ்விட ங்களை உள்ளடக்கிய மாநிலத்தின் ஐந்து யானை காப்பகங்களிலும் 26 வனப் பிரிவுகளிலும் இந்த பிரம்மாண்டமான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 2,000க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். வனத்துறை நிபுணர்கள் பிளாக் எண்ணிக்கை முறை மற்றும் கோட்டு வழி சாண கணக்கெடுப்பு முறை ஆகிய இரண்டு முக்கிய அறிவியல் முறைகளைப் பயன்படுத்தினர். கணக்கெடுப்பில் முதுமலை புலிகள் காப்பகம் அதிகபட்சமாக 162 யானைகள் காணப்பட்ட இடமாகப் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்த படியாக கூடலூர் 102 யானைகள், ஆனைமலை புலிகள் காப்பகம் - பொள்ளாச்சி பிரிவு 107 யானைகள், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 94 யானைகள், ஈரோடு 74 யானைகள் மற்றும் கோயம்புத்தூர் 72 யானைகள் ஆகிய பிரிவுகளில் கணிசமான எண்ணிக்கையிலான யானைகள் காணப்பட்டன. இந்த ஆய்வு யானை களின் தொகை அமைப்பு நிலையான தாகவும் ஆரோக்கியமானதாகவும் இருப்பதைக் காட்டுகிறது. வயதுவந்த யானைகள் மொத்த எண்ணிக்கையில் 44 சதவிகிதமாக உள்ளன. மேலும் ஆண்-பெண் விகிதம் 1:1.77 ஆகவும், வளர்ந்த பெண் யானைக்கும் கன்றுக்குட்டிக் கும் இடையேயான விகிதம் 1:0.50 ஆகவும் பதிவாகியுள்ளது.
