வள்ளலார் இல்லத்தில் 203வது ஆண்டு பிறந்தநாள் விழா
சிதம்பரம், அக் 5- புவனகிரி அருகே வள்ளலார் அவதரித்த இல்லத்தில் அவரது 203ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் உலகத்தில் உள்ள உயிருக்கெல்லாம் ஜீவகாருண்யத்தை வலி யுறுத்திய வள்ளலார் பிறந்த இல்லம் அமைந்துள்ளது. பின்னர் கொடி மரத்தின் அருகில் சென்று பழைய சன்மார்க்க கொடியை இறக்கிவிட்டு, புதிய மஞ்சள் வெள்ளை நிறம்கொண்ட சன்மார்க்க கொடியை ஏற்றி வைத்து அகவற்பாராயணம் படித்து சன்மார்க்க கொடியை ஏற்றி வைத்தனர். பின்னர் தொட்டிலில் கிடத்தி வைக்கப்பட்ட வள்ள லாரின் குழந்தை வடிவ உருவச் சிலைக்கு மலர்கள் தூவி வணங்கினர். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் கிராம மக்கள் ,வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்த சன்மார்க்க அன்பர்களும் பொதுமக்க ளும் திரளாக கலந்து கொண்டு வணங்கி சென்ற னர். இதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
