tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

மினி வேன் கவிழ்ந்து 19 பேர் காயம்

சென்னை, செப். 23- சென்னை பெரம்பூரில் தூய்மைத் தொழிலாளர்கள் சென்ற மினி வேன் கவிழ்ந்த விபத்தில், 19 பேர் காயமடைந்தனர். சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் 19 தொழிலாளர்கள், மாதவரத்தில் இருந்து ஒரு மினி வேனில் செவ்வாயன்று காலை பெரம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த வேன் பெரம்பூர் மங்களபுரம் பகுதியில் வேகமாக திரும்பும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த ஓட்டுநர் உட்பட 19 பேர் காயமடைந்தனர். காயமடைந்து இடிபாடுகளிடையே சிக்கியிருந்த தொழிலாளர்களின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு திரண்ட பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய அனைவரும் சிறிது நேரத்தில் மீட்கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இது தொடர்பாக புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைக் திருட்டு

வேலூர் செப்.23-  வேலூர், சைதாப்பேட்டையை சேர்ந்தவர் முபாரக்(45). இவர் காட்பாடியில் உள்ள சிக்கன் கடையில் வேலை செய்கிறார். கடந்த 18ம் தேதி வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடை எதிரே பைக்கை நிறுத்திவிட்டு டீ குடித்தார். பின்னர் பைக்கை பார்த்தபோது காணவில்லை. இதை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வடக்கு போலீசில் முபாரக் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கை திருடிச்சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர். 

துணை முதல்வர் ஆய்வு

விருதுநகர், செப்.23- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவ லர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.   விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லி புத்தூர், இராஜபாளையம், திருச்சுழி, அருப்புக் கோட்டை ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் செயல் படுத்தப்பட்டு வரும் திட்ட ங்கள் குறித்தும், பயனாளி கள் விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற் கொண்டார்.