ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு துரோகம் இழைக்கும் அதிமுக திருவள்ளூர் பொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் சாடல்
திருவள்ளூர், பிப். 25- “பாஜகவை உறுதியாக எதிர்த்த ஜெயலலிதாவின் பெயரைக் கூறிக்கொண்டு, அதே பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள எடப்பாடி பழனி சாமி அவருக்குத் துரோகம் இழைக்கிறார். இதற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். பாஜக மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கை களைக் கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதி யளிப்புக்காகவும் செவ்வா யன்று (பிப். 24) திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி நிதி மற்றும் நெரிக்குற வர் இன மக்கள் வழங்கிய பணமாலையைப் பெற்றுக் கொண்டு கே.பால கிருஷ்ணன் ஆற்றிய உரை யின் முக்கிய அம்சங்கள்: மக்களின் நிதி - கார்ப்பரேட் பணத்தை விட மேலானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாதாரண உழைக்கும் மக்களிடமிருந்து நிதியை பெறுவதையே பெருமை யாகக் கருதுகிறது. “கோடிக் கணக்கான ரூபாய் கார்ப்ப ரேட் நிதி எங்கள் கால் தூசு க்குச் சமம். அன்றாடம் மணி மாலை விற்றுப் பிழைப்பு நடத்தும் நெரிக்குறவர் இன மக்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தைக் கட்சிக்கு வழங்கியிருப்பது நெகிழ்ச்சி யளிக்கிறது. நாங்கள் கார்ப்ப ரேட்களின் கதவுகளை ஒரு போதும் தட்ட மாட்டோம்; மக்களின் கதவுகளையே உரிமையுடன் தட்டுவோம். கடவுளுக்குக் கொடுப்பதும் கம்யூனிஸ்டுகளுக்குக் கொடுப்பதும் ஒன்றுதான் எனப் பெண்கள் தங்கள் சேமிப்பு உண்டியலையே வழங்குகிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார். ஜெயலலிதாவிற்குத் துரோகம் செய்யும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தற்போதை ய அரசியல் போக்கைக் கடு மையாக விமர்சித்த அவர், “ஜெயலலிதா தனது வாழ்நா ளின் கடைசி வரை பாஜகவை எதிர்த்தவர். ‘மோடியா? இந்த லேடியா?’ எனச் சவால் விட்டுத் தனித்துப் போட்டி யிட்டு வெற்றி பெற்றவர். ஆனால், இன்று அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, அவரது கொள்கைக்கு நேர்மாறாக மோடி மற்றும் அமித் ஷாவு டன் கூட்டணி வைப்பது ஜெயலலிதாவிற்குச் செய் யும் பச்சைத் துரோகம். சங்பரி வாரங்களை அருகில் வைத்துக்கொண்டு ஜெய லலிதா பிறந்த நாளைக் கொண் டாடுவது வெட்கக்கேடா னது” என்றார். அதிமுகவிற்குப் புகட்டப்படும் பாடம் தோல்வி பயத்தின் காரண மாகவே ஆட்சிக்கு வந்தால் ரூ. 10,000 வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி அறி விக்கிறார். “2021 வரை ஆட்சி யில் இருந்தபோது ஏன் இதனைச் செய்யவில்லை? அப்போது மக்கள் பணத்தைக் கொள்ளையடிப் பதிலேயே குறியாக இருந்த னர். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முடியாது என முன்பு எள்ளி நகை யாடிய எடப்பாடி, இப்போது பல்டி அடிக்கிறார். மதுரை திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்குத் துணைபோகும் அதிமுக விற்குச் சிறுபான்மை மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்” என்று கே.பால கிருஷ்ணன் சாடினார். ஒன்றிய அரசின் வஞ்சகம் நூறு நாள் வேலைத் திட்டத்தை அழிக்கத் துடிக்கும் மோடி அரசு, தமிழ கத்திற்கான நிதியை ஒதுக்கா மல் வஞ்சிக்கிறது. ஆனால், அதானி மற்றும் அம்பானி போன்ற பெருமுதலாளிகளு க்கு 16 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்கிறது. இத்த கைய மக்கள் விரோத மோடி அரசுடன் கைகோர்த்துள்ள அதிமுக கூட்டணிக்குத் தமிழ்நாட்டு மக்கள் படு தோல்வியைப் பரிசாக அளிப் பார்கள் என கே.பாலகிருஷ் ணன் தனது உரையில் உறுதி படத் தெரிவித்தார். (ந.நி.)
