states

img

தொழிற்சங்கங்களுடன் இணைந்து நாடு தழுவிய போராட்டம்

தொழிற்சங்கங்களுடன் இணைந்து நாடு தழுவிய போராட்டம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவிப்பு

சண்டிகர் இந்திய விவசாயிகளுக்கு விரோ தமாக  இறுதிப்படுத்தப் பட்டுள்ள  இந்தியா-அமெ ரிக்கா ஒப்பந்தத்திற்கு எதிராகவும் பாஜக அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கையை கண்டித்தும் தொழிலாளர் அமைப்புகளுடன் இணைந்து நாடு தழுவிய அளவில் தீவிர போராட்டம் நடத்த உள்ளதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) அறிவித்துள்ளது. ஹரியானா மாநிலம் குருக்ஷேத்தி ரத்தில் உள்ள ஜாட் தர்மசாலாவில் நடைபெற்ற  சம்யுக்த கிசான் மோர்ச்சா தேசியக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கி யத் தீர்மானங்கள் மற்றும் கோ ரிக்கைகள்: தேசியக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, முக்கியக் கோரிக்கைகள் நிறை வேறும் வரை அமைப்பின் தனித் தன்மையுடனும், தொழிற்சங்கங்க ளுடன் இணைந்தும் போராட்டங்க ளைத் தீவிரப்படுத்த எஸ்கேஎம் முடிவு செய்துள்ளது.  அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா  கையெழுத்தி டக் கூடாது என வலியுறுத்தியுள்ள துடன் மின்சாரத் திருத்த மசோதா, விதை மசோதா, நான்கு தொழிலா ளர் (சட்டம்) குறியீடுகள் மற்றும் ‘விபி-ஜி ராம்-ஜி’ சட்டம் ஆகிய வற்றை நிராகரிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி C2+50 என்ற அடிப்படையில் குறைந்தபட்ச ஆத ரவு விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும்.  விவசாயக் கடன்களை முழுமை யாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். 2013-ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை (LARR Act) முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்துள்ளது. மேலும், இந்திய விவசாயிகளின் நலன்களை அமெரிக்காவிடம் அட மானம் வைக்கும் வகையில் அந்நாட்டுடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் நலன்களுக்குத் துரோ கம் செய்துள்ள ஒன்றிய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. எதிர்கால  போராட்டத் திட்டங்கள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான மார்ச் 9 அன்று, தில்லி ஜந்தர் மந்தரில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து ‘தொழிலாளர்-விவசாயி நாடாளுமன்றம்’ நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக மார்ச் 9 வரை நாடு முழு வதும் பாஜகவின் விவசாய விரோதப் போக்கு குறித்து தொடர் பிரச்சாரம் செய்யப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதி யாக குடியரசுத் தலைவருக்கு தங்களின் கோரிக்கைகளை வலி யுறுத்தி நாடு முழுவதும் தபால் அனுப்பும் போராட்டம்  நடத்தப்படும். அந்த தபாலில் பியூஷ் கோயலை பதவி நீக்கம் செய்யவும், இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் பிரதமர் கையெழுத்திடக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.