tamilnadu

பசுக்குண்டர்களின்  கும்பல் வன்முறைகள் பின் வாங்குகிறதா  உச்சநீதிமன்றம்?

பசுக்குண்டர்களின்  கும்பல் வன்முறைகள் பின் வாங்குகிறதா  உச்சநீதிமன்றம்?

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகள் மற்றும் கும்பல் வன்முறைகளைத் தடுக்க 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய பொதுவான வழிகாட்டுதல்கள் தற்போதைய சூழலில் நிர்வகிக்க முடி யாதவை (Unmanageable) என்று  இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு (பிப்.23) கூறி யுள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.  மேலும் இதற்குப் பதிலாக, ஒவ் வொரு குற்றத்தையும் அதன் தனிப்பட்ட பின்னணி மற்றும் தகுதியின் அடிப்படை யில் அணுகி, ஒருவருடைய உரிமை மீறப் பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் “தனிநபர் சார்ந்த அணுகுமுறை யே” சிறந்தது எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த கூற்றானது பசுக் குண்டர்களின் வன்முறைகளை தடுப்பதில் இருந்து உச்சநீதிமன்றம் பின்வாங்குகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.  மிருகத்தன நடவடிக்கை 2018-ஆம் ஆண்டு தெஹசீன் பூனாவா லா வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பில்,  மேலும் இனம், சாதி, மதம் என எவ்வித வேறுபாடுமின்றி ஒவ்வொரு நபர்களை யும் பாதுகாக்க வேண்டியது அரசின் முதன்மைக்கடமை என அத்தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியதுடன் கும்பல் வன்முறைகளைத் தடுக்கவும், விசாரணை நடத்தவும், தண்டனை வழங்கவும் பல தடுப்பு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற் கொள்ள மாநிலங்களுக்கு உத்தரவிடப் பட்டது. இந்த உத்தரவு பின்பற்றப்படாத நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையில், எத் தனை நீதிமன்ற அவமதிப்பு மனுக்களைத் தான் ஏற்பது? மன்னிக்கவும், இந்த மனுவை எங்களால் விசாரிக்க முடியாது என்று கூறி நீதிபதிகள் மனுவை நிராக ரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.