அண்ணாமலை நகரில் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’
சிதம்பரம், ஜூலை 23 - சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’முகாம் நடை பெற்றது. அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூ ராட்சி மன்ற தலைவர் பழனி இந்த முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக் களை பெற்றார். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த முகாமில் மாலை 5 மணி வரை பொது மக்கள் மனு அளித்தனர். கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பம், வருவாய்த்துறை, கூட்டு றவுத்துறை, தொழிலாளர் நலத்துறை, மின் துறை, மகளிர் திட்டம், நகராட்சி, பேரூ ராட்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறை களை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட னர். அலுவலர்கள் அந்தந்த துறைகள் சார்ந்த குறைகளை உடனடியாக தீர்க்க நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறி னார். மொத்தம் 603 மனுக்கள் பெறப் பட்டுள்ளன. பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் 40 நாட்களுக்குள் தீர்வு காணப் படும் என அறிவிக்கப்பட்டது. அண்ணாமலை நகர் பேரூராட்சியில் வரும் செப்டம்பர் அன்று அடுத்த முகாம் நடைபெறும். இதில் விடுபட்டவர்கள் அனைவரும் கலந்து கொண்டு மனு அளித் தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும் என பேரூராட்சி மன்ற தலைவர் தெரி வித்துள்ளார். அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூ ராட்சி செயல் அலுவலர் பா.கோமதி, துணைத்தலைவர் தமிழ்செல்வி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டு முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்தனர்.