அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவை
வரவேற்புக்குழு அமைப்பு திருப்பூர், செப்.5- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவை நவம்பர் 8 அன்று திருப்பூரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநில பிரதிநிதித்துவப் பேரவை யைச் சிறப்பாக நடத்துவதற்கு வர வேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் காமாட்சியம்மன் திரு மண மண்டபத்தில் வெள்ளியன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பிரதிநிதித்துவப் பேரவை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மாலையில் மாநில பிரதிநிதித்துவப் பேரவைக்கான வரவேற்புக்குழு அமைப் புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் (பொறுப்பு) சி.பாண்டியம் மாள் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.மதன்குமார் வர வேற்றார். மாநிலத் தலைவர் மு.பாஸ் கரன் வரவேற்புக்குழு முன்மொழிவை முன்வைத்தார். இதில் வரவேற்புக் குழு தலைவராக அ.நிசார் அகமது, வரவேற்புக்குழு செயலாளராக மா. பாலசுப்பிரமணியன், வரவேற்புக் குழுப் பொருளாளராக ஜெ.அந்தோணி ஜெயராஜ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். பல்வேறு துறைவாரி சங்கங்க ளின் நிர்வாகிகள், ஊழியர்கள் உள்பட மொத்தம் 133 பேர் கொண்ட வரவேற் புக்குழு அமைக்கப்பட்டது. இதில் மாநில பொதுச் செயலாளர் மு.சீனிவாசன் தற்போதைய சூழலில் மாநில பிரதிநிதித்துவப் பேரவையை திருப்பூரில் வெற்றிகரமாக நடத்து வது குறித்து வலியுறுத்திப் பேசினார். இக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட் டச் செயலாளர் மா.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.