tamilnadu

img

நீரில் மூழ்கி இளைஞர் பலி

நீரில் மூழ்கி இளைஞர் பலி

கோவை, ஜூலை 14- சித்திரை சாவடி அணைக்கட்டில் குளிக்க சென்ற  இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த நொய்யல் ஆற்றில் முதல் தடுப்பணையான சித்திரை  சாவடி தடுப்பணையில் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர் உட்பட இளைஞர்கள் சேர்ந்து  அணைக்கட்டுக்கு வந்து குளித்துள்ளனர். அப்போது  ஆழமான இடத்தில் குளித்த போது இளைஞர் ஒருவர்  நீரில் மூழ்கி உள்ளார். அவரை காப்பாற்ற முடியாமல் உடன் வந்தவர்கள் தொண்டாமுத்தூர் தீயணைப்பு துறை மற்றும் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.‌ சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நீரில்  மூழ்கிய இளைஞரை மீட்டனர். அப்போது அவர் உயிரி ழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த னர். தொடர்ந்து ஆலாந்துறை காவல் ஆய்வாளர் முத்து குமார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ஆர்.எஸ். புரம் பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படித்து வரும்  மாதேஸ், வடவள்ளியை சேர்ந்த தினேஷ் 26, மாநக ராட்சி தற்காலிக பணியாளராக வேலை செய்து வரும்  கார்த்திக் (28) ஆகியோர் திங்களன்று காலை 11 மணிக்கு  சித்திரை சாவடி தடுப்பணையில் வந்து குளித்துள்ள னர். அப்போது ஆழமான பகுதியில் கார்த்திக் சென்று  குளித்து போது நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந் தது. சித்திரை சாவடி தடுப்பணையில் குளிக்க வேண் டாம் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை பலகைகள் பல  இடங்களில் வைத்திருந்தாலும் அதையும் மீறி குளிப்ப தால், இத்தகைய உயிரிழப்புகள் ஏற்படுகிறது என போலீ சார் வேதனை தெரிவித்தனர்.