tamilnadu

img

வாலிபர் சங்க பேரூர் நகர மாநாடு

வாலிபர் சங்க பேரூர் நகர மாநாடு

கோவை, ஆக.10- வாலிபர் சங்கத்தின் பேரூர் நகர மாநாட்டில் நிர்வாகிகள்  தேர்வு செய்யப்பட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட் டம், பேரூர் நகர 7 ஆவது மாநாடு ஞாயிறன்று, செல்வபுரத் தில் தோழர் யு.கே.சிவஞானம் நினைவரங்கத்தில் நடைபெற் றது. நகரத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித் தார். துணைச்செயலாளர் கார்த்திகா வரவேற்றார். மாவட்ட  துணைத்தலைவர் எஸ்.நிசார் அகமது துவக்கவுரையாற்றி னார். வாலிபர் சங்க முன்னாள் நிர்வாகிகள் சாந்தாராம், பால சுப்பிரமணியம், மாதர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் மலை யரசி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், பி.என். புதூர் கோவில் மேடு அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். சொக்கம்புதூர்  பகுதி மக்களின் வாழ்வாதார உரிமையை பறிக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவை கைவிட வேண் டும். அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங் களை தடுத்திட வேண்டும்,  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் நகரத் தலைவராக  ஜி.கார்த்திக், செயலாளராக சுகதேவ், பொருளாளராக  யூசுப் அகமது உட்பட 11 பேர் கொண்ட நகரக்குழு தேர்வு செய் யப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து முருகன்  நிறைவுரையாற்றினார். முடிவில், வைகை நன்றி கூறினார்.