tamilnadu

img

வாலிபர் சங்க பாலக்கோடு – காரிமங்கலம் மாநாடு

வாலிபர் சங்க பாலக்கோடு – காரிமங்கலம் மாநாடு

தருமபுரி, ஜூலை 27- வாலிபர் சங்கத்தின் பாலக் கோடு – காரிமங்கலம் வட்ட மாநாட் டில், 3 இடைக்கமிட்டிகள் உருவாக் கப்பட்டன. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் தருமபுரி மாவட்டம், பாலக் கோடு – காரிமங்கலம் வட்ட மாநாடு,  திருமலை வாசன் திருமண மண்டபத் தில் சனியன்று நடைபெற்றது. வட்ட  துணைத்தலைவர் சத்யராஜ் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எம்.சிலம்பரசன் சங்கத் தின் கொடியை ஏற்றி வைத்தார். மாநில துணைத்தலைவர் கே.ஆர். பாலாஜி துவக்கவுரையாற்றினார். வட்டச் செயலாளர் பி.கோவிந்த சாமி, பொருளாளர் இ.மீரா ஆகி யோர் அறிக்கைகளை முன்வைத்த னர். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மாரி முத்து, வாலிபர் சங்க முன்னாள்  தலைவர் பி.கார்ல் மார்க்ஸ் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். பாலக் கோடு அரசு மருத்துவமனையில் சிடி,  எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி செய்து தர  வேண்டும். பாலக்கோடு மற்றும் காரி மங்கலம் ஆகிய இரு வட்டங்களி லும் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். தக்காளி, மா ஆகிய உணவுப் பொருட்களுக்கு மதிப்பு கூட்டல் சம்பந்தமான புதிய தொழிற்சாலைகளை துவங்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும், உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, பாலக் கோடு வட்டம், பாலக்கோடு நகரம்,  காரிமங்கலம் வட்டம் என 3 கமிட்டி களாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி,  பாலக்கோடு வட்டத் தலைவராக  ரவி, செயலாளராக பி.கோவிந்த சாமி, பொருளாளராக சத்யராஜ், துணைத்தலைவராக பார்வதி, துணைச்செயலாளராக இளவரசன்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பாலக்கோடு நகரக்குழு தலைவராக எஸ்.அருள் குமார், செயலாளராக அலெக்சாண்டர், பொருளாளராக புவனா, துணைத்தலைவராக பாண் டியம்மாள், துணைச்செயலாளராக சவுந்திரபாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். காரிமங்க லம் வட்டத் தலைவராக அஜித்,  செயலாளராக கார்த்திக், பொருளா ளராக மீரா, துணைத்தலைவராக காளியப்பன், துணைச்செயலாள ராக பெரியசாமி ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர். மாவட்டச் செயலா ளர் எம்.அருள் குமார் நிறைவுரை யாற்றினார்.