கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பூர், செப். 15 - மத்திய அரசு கல்வி நிறுவ னங்களான இந்திய தொழில் நுட்ப நிறுவனம் (ஐஐடி), இந் திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்), இந்திய தகவல் தொழி்லநுட்ப நிறுவனம் (ஐ ஐஐடி), தேசிய தொழில் நுட்ப நிறுவனம் (என்ஐடி) மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பயிலும் தமிழ கத்தைச் சார்ந்த பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2025- 2026 ஆம் கல்வி ஆண்டிற் கான புதிய மற்றும் புதுப்பித் தல் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே கூறியி ருக்கிறார். பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத் தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை-5 மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகத்தை அணுகி அல்லது https://bc mbcmw.tn.gov.in/welf schemes.htm#schol arship_schemes என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண் ணப்பிக்கலாம்.
