tamilnadu

img

கோவையில் உலக மருந்தாளுநர் தின விழா கொண்டாட்டம்

கோவையில் உலக மருந்தாளுநர் தின விழா கொண்டாட்டம்

கோவை, செப்.28- உலக மருந்தாளுநர் தின விழாவை  முன்னிட்டு, கோவையில் மருந்தாளுநர்  சங்கம் சார்பில் குடும்ப விழா நடைபெற் றது. உலக மருந்தாளுநர் தின விழாவை முன்னிட்டு, மருந்தாளுநர்களை ஊக் கப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு  அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் குடும்ப விழா ஞாயிறன்று நடை பெற்றது. கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தாமஸ் கிளப்பில் நடை பெற்ற இவ்விழாவிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.வெங்கடாச லம் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் எம்.என்ஆல்டிரின் ஜோசப் வர வேற்றார். அமைப்புச் செயலாளர்கள் உமாபதி, சுரேஷ் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். தமிழ்நாடு அரசு அனைத்து  மருந்தாளுநர் சங்க மாநிலச் செயலா ளர் பெ. வல்லவன் சிறப்புரையாற்றி னார். மண்டல மருத்துவ நிர்வாக அலுவ லர் எஸ்.பிரமிளா, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவ மனை மருத்துவர் மணிவண்ணன், கோவை மருத்துவக்கல்லூரி மருத்து வர் வி.சரவணபிரியா, அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில், பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.