மோடியிடம் நேரில் கேட்பாரா எடப்பாடி?
திருப்பூரில் வெள்ளியன்று வடக்குத் தொகுதி பி.என்.ரோடு பகுதியிலும், தெற்குத் தொகுதி மாநகராட்சி அலுவல கம் அருகிலும் அதிமுக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். முன்னதாக தொழில் துறையி னரை தனியார் ஹோட்டலில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். பிரச்சாரத்தின்போது, அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பினால் திருப்பூர் தொழில் 50 சதவிகிதம் பாதிக்கப்பட் டுள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர் கள் வேலையிழக்கும் ஆபத்து ஏற்பட் டுள்ளது என்று கூறினார். எனினும் இப்பிரச்சனையில் தொழிலைப் பாது காக்க முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டு எம்.பி.க்கள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தார்களா? என்று கேள்வி எழுப்பினார். குறிப்பாக 50 சதவிகிதம் வரி விதிப்பு பிரச்சனையில் தொழில் துறை யினரை முதல்வர் அழைத்துப் பேசி கோரிக்கைகளைக் கேட்டறி்ந்து பிரதமரி டம் கோரிக்கை வைத்திருக்க வேண்டும் என்றார். ஆனால் இதுவரை நடந்தது எதுவுமே தெரியாமல் அல்லது தெரிந் தும் தெரியாதது போல இங்கு எடப் பாடி பேசியிருக்கிறார் என்பதுதான் வியப்பளிக்கிறது. அமெரிக்கா 50 சதவிகித வரி விதிப் பதாக டிரம்ப் அறிவித்த சூழ்நிலையில் உடனடியாக ஆகஸ்ட் 14ஆம் தேதி தமி ழக முதல்வர் ஸ்டாலின் கோவை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் ஏற்றுமதி தொழில்துறை சங்கங்களின் நிர்வாகி களை சென்னைக்கு நேரில் அழைத்துப் பேசி கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அத்துடன் 16ஆம் தேதி பிரதமருக்கு இது குறித்து கோரிக்கை கடிதம் எழு தியிருந்தார். முன்னதாக திருப்பூர் எம்.பி.கே.சுப்பராயனும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அத்துடன் ஆகஸ்ட் 27ஆம் தேதி 50 சதவிகித அமெரிக்க வரி விதிப்பு நடை முறைக்கு வந்தவுடன், ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதினார். இதன் பிற கும் ஒன்றிய அரசிடம் இருந்து ஏற்றுமதி தொழில்களைக் காப்பதற்கான உடனடி நடவடிக்கை எதுவும் இல்லை. இந்நிலையில்தான் செப்டம்பர் 2ஆம் தேதி திருப்பூரில் மதசார்பற்ற முற்போக் குக் கூட்டணி கட்சிகள் திருப்பூர் உள் ளிட்ட ஏற்றுமதி தொழில் துறையைப் பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில் எம்.பி.க்கள் ஆ.ராசா, சு.வெங்கடேசன், கே.சுப்பராயன், தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். அந்த போராட்டம் நடைபெற்றபோது தான் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத் தாராமன் சென்னையில் தொழில் துறை யினர் சந்திப்புக் கூட்டத்தை நடத்திச் சென்றார். இதற்கு பிறகுதான், எடப்பாடி பழனிசாமி ஏற்றுமதி தொழிலைப் பாது காக்க உதவ வேண்டும் என மோடிக்குக் கடிதம் எழுதியதாக அறிக்கை விட்டார். 50 சதவிகித அமெரிக்க வரி அம லுக்கு வந்து சனிக்கிழமையுடன் 18 நாட் கள் ஆகிவி்ட்டது. இன்று வரை ஒன்றிய பாஜக அரசு ஏற்றுமதி தொழிலைப் பாதுகாக்க உடனடி உதவிகள் என்று எதுவும் அறிவிக்கவில்லை. தொழில் துறையினரும் ஒன்றிய அரசின் சலுகைத் திட்ட அறிவிப்பை எதிர் பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால் திருப்பூர் கூட்டத்தில் பேசிய எடப்பாடி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் எதுவுமே செய்யவில்லை என்று நா கூசாமல் பேசுகிறார். முதல்வர் தொழில் துறையினரை அழைத்துப் பேசி கோரிக்கைகள் குறித்து இரண்டு முறை பிரதமருக்கு கடிதம் எழுதி், திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியும் கூட மோடி அரசு இதுவரை கண்டு கொள்ள வில்லை. திருப்பூரைச் சேர்ந்தவர் துணை குடி யரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதை தமிழருக்குப் பெருமை, கொங்கு மண்டலத்துக்குப் பெருமை என்று கொண்டாடி வருகின்றனர். ஆனால் திருப்பூரின் ஏற்றுமதித் தொழில் வாய்ப்பு சரியக்கூடிய ஆபத்து இருக்கிறதே? இதனால் 2 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி யாகும் நிலை உள்ளதே? எதிர்க்கட்சிகள் சொல்லிக் கேட்காத மோடி, கூட்டணிக் கட்சித் தலைவர் சொன்னால் கேட்பாரா? ஏற்றுமதி தொழில்துறை கோரிக்கை குறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று மோடியிடம் கேட்க எடப்பாடி பழனிசாமி தயாரா? மக்களைக் காப் போம் என்று பயணம் செல்லும் பழனிச் சாமி, ஏற்றுமதி தொழிலைக் காக்க பிர தமர் மோடியை நேரில் சந்தித்து கேட் பாரா? இல்லாவிட்டால் அவரது பேச்சு தொழிலைப் பாதுகாப்பதற்கானதல்ல; தேர்தலில் வாக்குப் பெறுவதற்காக, இங்குள்ளோரை ஏமாற்றுவதற்கான பசப்புரை! என்றே திருப்பூர் மக்கள் நினைப்பார்கள். வே.தூயவன்