உலகில் ஆளும் வர்க்க நலன்களுக்காகவே போர்கள் நடத்தப்படுகின்றன
போர்களின் வரலாறு வகுப்பில் அன்வர் உசேன் தகவல்
திருப்பூர், செப்.19 - உலகில் ஆளும் வர்க்கங்க ளின் நலன்களை பாதுகாப்ப தற்காகவே தொடர்ந்து போர்கள் நடத்தப்படுகின்றன என்று திருப் பூரில் நடைபெற்ற போர்களின் வர லாறு என்ற வகுப்பில் எழுத்தாளர் அன்வர் உசேன் கூறினார். திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் யுத்தங்களின் அர சியல் என்ற தலைப்பில் பத்து நாட் கள் காலை நேர தொடர் வகுப்பு நடைபெறுகிறது. இதன் முதல் வகுப்பு வெள் ளிக்கிழமை நடைபெற்றது. தமு எகச மாநில செயற்குழு உறுப் பினர் ஆர்.ஈஸ்வரன் தலைமை யில் நடைபெற்ற இந்த வகுப் பில், ‘போர்களின் வரலாறு’ என்ற தலைப்பில் எழுத்தாளர் அன்வர் உசேன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதா வது: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பு துறை என்பதை போர்களின் துறை என்று பெயர் மாற்ற இருப்பதாக கூறியிருக்கிறார். ஆண்டுக்கு ஒரு ட்ரில்லியன் டாலர் ராணுவத்திற் காக அமெரிக்கா செலவிடுகிறது. ராணுவத்திற்கு அதிக நிதி செல விடக் கூடிய முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அடுத்து இருக்கக்கூடிய ஒன்பது நாடு கள் செலவிடக் கூடிய ராணுவ நிதி ஒதுக்கீட்டை விட அமெரிக்கா இரண்டு மடங்கு செலவிடுகிறது. அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் போர் வெறி அந்த அளவிற்குள் ளது. மனித குலம் தோன்றியதிலி ருந்து போர் பிரிக்க முடியாததாக இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் வர்க்க பேதமற்ற சமுதாயத்தில் நடைபெற்ற போர்கள், வர்க்க சமுதாயம் உருவானதற்கு பிறகு சுரண்டும் வர்க்கங்களின் நலன்க ளுக்காக நடத்தப்பட்ட போர்கள், சுரண்டப்படும் ஒடுக்கப்படும் வர்க்கங்கள் விடுதலைக்காக நடத்திய போர்கள் என மூன்று வகையான போர்கள் உள்ளன. நவீன வரலாற்றில் நடை பெற்ற முதல் போர் 15,000 ஆண்டு களுக்கு முன்பு நடைபெற்று உள் ளது. நைல் நதிக்கரையில் 64 மனி தர்களின் எலும்புக்கூடுகளில் இருக்கக்கூடிய காயங்களை கொண்டு போரில் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 3 விதமான போர்கள் நடைபெற்றுள்ளன. முதலில் ஆரியர்களுக்கிடையே நடைபெற்ற போர், அடுத்து சிந்து சமவெளி மக்களை கொன்று குவித்த போர், மூன்றாவதாக வனங்களில் வசித்த பழங்குடி மக்களுக்கு எதிராக நடத்திய அவர்களை அழித்த போர் என மூன்று வகையான போர்கள் நடைபெற்றுள்ளன. இதில் இறுதி வெற்றி ஆரியர்களுக்கு கிடைத் துள்ளது. தமிழ்நாட்டிலும் கடை ஏழு வள்ளல்கள் எனப்படும் இனக் குழு தலைவர்களுக்கு எதிராக மூவேந்தர்கள் தொடுத்த போர் நடைபெற்றுள்ளது. இது ஆதி பொதுவுடமை சமுதாயத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. ரோம சாம்ராஜ்யத்தில் கிமு 197 முதல் கிமு 99 வரை ஏழு அடி மைப் போர்கள் நடைபெற்றுள் ளன. இதில் சக்தி வாய்ந்த ரோம் சாம்ராஜ்யத்திற்கு எதிராக ஸ்பார்ட்டகஸ் அடிமைகளை திரட்டி நடத்திய எழுச்சி வரலாற்று புகழ் பெற்றது. அடிமைகள் எழுச்சி கொடூரமாக அழித்து ஒழிக் கப்பட்டது. அதன் பிறகு கிபி நான் காம் நூற்றாண்டில் ரோம், எகிப்து பேரரசுகள் முடிவுக்கு வரும் வரை அடிமைகள் போராட்டம் நடை பெறவில்லை. நிலப்பிரப்புத்துவ காலத்தில் செல்வங்களை கொள்ளைய டிக்க போர்கள் நடைபெற்றுள் ளன. 1096 ஆம் ஆண்டு முதல் 1772 ஆம் ஆண்டு வரை 9 சிலுவைப் போர்கள் நடைபெற்றுள்ளன. யூதர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிறிஸ்து பிறந்த இடமான ஜெருச லேமை கைப்பற்றுவதற்காக இந்த போர்கள் நடத்தப்பட்டுள் ளன. மதத்திற்காக நடைபெற்ற போர் என்றாலும், அதற்குள் பல் வேறு பொருளாதார காரணங்கள் இருந்துள்ளன. “பொருளாதார காரணிகளை முகமூடி இட்டு மறைக்கும் மத காரணிகளைக் கொண்டது’’ தான் சிலுவைப்போர் என மார்க்ஸ் கூறியுள்ளார். மனித குல வரலாற்றில் மிக கொடூரமான போர் சிலுவை போர். இதில் 60 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டதாக ஆய் வாளர்கள் கூறுகின்றனர். அதேபோல் மங்கோலி யாவை சேர்ந்த செங்கிஸ்கான் அரேபியா வரை படையெடுத்து முழுவதையும் அளித்த போர் மிக மோசமானது. உலகின் 17 சதவீத நிலப்பரப்பை அவர் கைப்பற்றி னார். இந்தப் போரின் போது பாக்தாத்தில் இருந்த மிகப்பெ ரிய நூலகம் அழிக்கப்பட்டது. இத னால் நைல் நதியின் நீல நிறம் அழிக்கப்பட்ட புத்தகங்களின் மையால் கருப்பு நிறமாக மாறி யது என்று ஒருவர் பதிவு செய்து இருக்கிறார். கத்தோலிக்க மதத்தின் இரு பிரிவினர்களிடையே நடைபெற்ற 150 ஆண்டுகால போர் அடிப்ப டையில் நிலப் பிரபுத்துவ சக்திக ளுக்கும், புதிதாக உருவான முத லாளித்துவ சக்திகளுக்கும் இடைப்பட்ட போராக நடந்தது. இதில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் உயிரிழந்தனர். அதேபோல் சியா சன்னி பிரி வினர் இடையே நடைபெற்ற போரில் 40 லட்சம் பேர் கொல்லப் பட்டனர். ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்கா கண்டத் தில் குடியேறியவர்கள் அந்த மண் ணின் மைந்தர்களை கொன்று குவித்தனர். ஏறத்தாழ 5 கோடி யில் இருந்து பத்து கோடி பேர் வரை அழிக்கப்பட்டனர். ஒரு பகுதி போரிலும், மற்றொரு பகுதி யினர் ஐரோப்பியர்கள் கொண்டு சென்ற தொற்று நோயினாலும் உயிரிழந்தனர். இன்று 34 கோடி பேர் வசிக்கும் அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப், மற்றவர்களை வந்தேறி என்கிறார். ஆஸ்திரேலியா கண்டத்தை கைப்பற்றிய ஐரோப்பியர்கள் 60 ஆயிரம் பழங்குடி மக்களை கொலை செய்தனர். அமெரிக்கா வில் 1500 ஆம் ஆண்டு முதல் 1866 ஆம் ஆண்டு வரை 366 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு கோடியே 25 லட்சம் பேர் அடிமைகளாக கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 20 சதவீதம் பேர் கப்ப லிலேயே இறந்தனர். தற்போதைய முதலாளித்துவ சமுதாயத்தில் தொடர்ந்து போர் கள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. 1871 ஆம் ஆண்டு பாரிஸில் தொழிலாளி வர்க்கம் நடத்திய பாரிஸ் கம்யூன் என்ற புரட்சி 81 நாட்கள் நீடித்தது. சோச லிச கொள்கைகளுக்காக தொழி லாளி வர்க்கம் நடத்திய அந்த புரட்சி கொடூரமாக அழித்து ஒழிக் கப்பட்டது. அதேசமயம் சமீப காலத்தில் 1971 ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்த வர்த் தக தடை காரணமாக உயிரிழந்த வர்கள் 3 கோடியே 80 லட்சம் பேர். இந்தக் காலத்தில் போரில் கொல் லப்பட்டவர்கள் ஆண்டுக்கு சராச ரியாக ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேர். ஆனால் வர்த்தகத் தடை யால் ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சத்து 64 ஆயிரம் பேர் உயி ரிழந்துள்ளனர். போரில் கொல்லப்பட்டவர் களை விட முதலாளித்து அரசுக ளின் வர்த்தகத் தடை காரணமாக மருந்து மாத்திரை உயிர் காக் கும் சிகிச்சை இதர உணவு பொருட்கள் கிடைக்காமல் கொல் லப்பட்டவர்கள் ஐந்து மடங்கு அதிகம். உலகில் ஏகாதிபத்தி யம் இருக்கும் வரை போர் தொடரும். ஆளும் வர்க்கங்க ளின் நலன்களுக்காகவே போர் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இவ்வாறு அன்வர் உசேன் கூறி னார். முடிவில் ஹரி நன்றி கூறி னார்.