tamilnadu

img

அரசின் உறுதியை ஏற்று விதொச போராட்டம் தற்காலிக விலக்கம்

அரசின் உறுதியை ஏற்று விதொச போராட்டம் தற்காலிக விலக்கம்

ஈரோடு, ஆக.9– அந்தியூர் வட்டாட்சியரைக் கண் டித்து அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் அறிவித்த போராட்டம் தற் காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள் ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட் டம், பொய்யேரிக்கரை மக்கள் அப்பகு தியில் இருக்கும் அரசு புறம்போக்கு நிலத்தினை சுடுகாடாகப் பயன்படுத்தி வந்தனர். அப்பகுதியில் உயிரிழப்புகள் நிகழும் போது, பிணத்தைப் புதைக்க மயானத்திற்குச் சென்றால், வட்டாட்சிய ரின் தூண்டுதலின் பேரில் காவல் துறை யினர் வழக்குகள் பதிவு செய்கின்றனர். அக்குடியிருப்பின் அருகில் வசிக்கும்  கருப்புசாமி என்பவர் உயர்நீதிமன்றத் தில் பெற்றுள்ள ஆணையால் இது போன்று வழக்குகள் பதிவு செய்யப் படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று நடைபெற்ற அள விடும் பணியையும் வட்டாட்சியர் தலை யிட்டு நிறுத்தி விட்டார்.  இந்நிலையில் அப்பகுதியில் நிக ழும் ஒவ்வொரு மரணத்தின் போதும், வேறு இடமின்றி அப்பகுதியினர் சட லத்துடன் மயானத்திற்கு செல்வதும், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வரு வாய் துறையினர் காவல் துறையின ருடன் வந்து வழக்குகள் பதிவு செய்வ தும் வாடிக்கையாகி வருகிறது. பாதிக் கப்பட்ட மக்களுக்காக அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார் பில் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட் டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி மக் கள் போராட்டத்திற்கு தயாரான நிலை யில் கிராம நிர்வாக அலுவலர் வாயிலாக இம்மாதம் 19ஆம் தேதி நில அளவை செய்யப்படும் என்று எழுத்து மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. ஆகவே, பிரச்சனைக்கு தீர்வு  காண முதலில் அளவீடு நடைபெற வேண் டும். எனவே, போராட்டம் தற்காலிக மாக கைவிடப்படுகிறது என அறிவிக் கப்பட்டது. முன்னதாக வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சங்கத்தின் மாவட்டத் தலை வர் கே.ஆர்.விஜயராகவன், ஆர்.முரு கேசன், ஏ.கே.பழனிசாமி, சொபஸ்டி யன், மாதேஸ், சீனிவாசன் மற்றும் பாதிக் கப்பட்ட மக்கள் திரண்டிருந்தனர்.