tamilnadu

img

கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

சேலம், செப்.9- மலைகள் சூழ்ந்த சேலம் மாவட்டத்தில் நடக்கும் கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என வாலிபர் சங்க  மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள் ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் சேலம் மாவட்ட 18 ஆவது மாநாடு, ஆத்தூர் என்கே திருமண மண்டபத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடை பெற்றது. வரவேற்புக்குழு தலை வர் எஸ்.கணேசன் வரவேற்றார். வெண்கொடியை மாவட்ட துணைச் செயலாளர் டி.தர்மலிங்கம் ஏற்றி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பி னர் டி.மனோகரன் அஞ்சலி தீர் மானத்தை வாசித்தார். மாவட்டச் செயலாளர் வி.பெரியசாமி, பொரு ளாளர் எம்.வெற்றிவேல் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலப் பொருளாளர் கே.எஸ்.பாரதி, மாநில துணைத்தலைவர் எம்.கே.பழனி, மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.அர்ஜூன் ஆகி யோர் உரையாற்றினர். இம்மாநாட்டில், ஏற்காட்டில் 68  கிராமங்கள் உள்ள நிலையில், 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளி படிப்பை முடித்துவிட்டு, கல்லூரி இல்லாமல் வெளியில் சென்று படிக்கும் நிலை உள்ளது. எனவே, ஏற்காட்டில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். இதேபோல் கல்வராயன் மலையில் 98க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில், இப்பகுதியின் தன்மைக்கேற்ற வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும். சீல நாயக்கன்பட்டி ரவுண்டானாவில் போதுமான போக்குவரத்து சிக்னல்  மற்றும் மேம்பாலம் முறையாக அமைத்து, போக்குவரத்து நெரி சலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைகள் சூழ்ந்த மாவட்டமாக சேலம் உள்ள நிலை யில், இங்குள்ள இயற்கை வளங் கள் கொள்ளையடிக்கப்பட்டு வரு வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழப்பாடி பகுதியில் அறிவுசார் மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். பனமரத்துப்பட்டி ஏரியை முறையாக பராமரித்து குடிநீர் ஆதா ரத்தை மேம்படுத்த வேண்டும். மோகன் குமாரமங்கலம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் சேலம் மாவட்ட அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளராக வி.பெரிய சாமி, துணை ஒருங்கிணைப்பாளர் களாக கே.பகத்சிங், கோகுல் ஆகி யோரும், 13 அமைப்புக்குழு உறுப் பினர்களும் தேர்வு செய்யப்பட்ட னர்.