மதுரைசிப்காட்டில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வலியுறுத்தல்
தருமபுரி, ஆக.28- தருமபுரி சிப்காட்டில் விவசா யம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத் தில் விவசாயிகள் வலியுறுத்தினர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அதி யன் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில், விவசாயி கள் சங்க பிரதிநிதிகள் பேசுகை யில், தருமபுரி மாவட்டத்தில் விவ சாயத்திற்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்பு உள்ளது. மேய்ச்சல் நிலத் தில் சீமை கருவேலம் மரம் அடர்ந் துள்ளது. மேய்ச்சல் பகுதி குறை வாக உள்ளது. தருமபுரி சிப்காட் டிற்கு 924 ஏக்கர் மேய்ச்சல் நிலம் எடுக்கப்பட்டது. அதற்கு ஈடான நிலம் ஒதுக்கப்படவில்லை. மேய்ச் சல் நிலம் குறைந்தால் கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்படுவார்கள். தருமபுரி மாவட்டத்தில் கால்நடை மேய்ச்சல் நிலம் அடையாளப் படுத்தப்பட வேண்டும். மேலும், தரு மபுரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக ளில் டிராக்டர் விவசாயப் பயன் பாட்டிற்கு உள்ளது. இதற்கு ஓட்டு நர் இல்லை. இதனால் விவசாயி கள் உழவு பாதிக்கப்படுகிறது. எனவே, ஓட்டுநரை விரைந்து நிய மிக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி களிகளில் இ – சேவை மையம் உள் ளது. பல்வேறு மையங்களில் ஆள் பற்றாக்குறை உள்ளது.இத னால் அரசின் நலத்திட்டங்களுக்கு கிராம மக்கள் விண்ணப் பிக்க சிரமப்படுகின்றனர். ஆள்பற் றாக்குறையை போக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். தருமபுரியில் 2400 ஏக்கரில் அமையவுள்ள சிப்காட்டில் விவசா யம் சார்ந்த தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ஆல புரம் கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் குறுகிய சாலையை விரிவுபடுத்த வேண்டும். மருத் துவ உதவியாளரை பணியில் அமர்த்த வேண்டும். பல கால்நடை மருத்துவமனைகளில் மாலை 5 மணி வரை மருத்துவர் இருப்ப தில்லை. மருத்துவர்கள் 5 மணி வரை பணியில் இருப்பதை உறு திப்படுத்த வேண்டும் என வலியு றுத்தினர். இதையடுத்து விவசாயி களின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக ஆட்சியர் உறுதிய ளித்தார்.