tamilnadu

திருப்பூரில் உயிர்நீத்த காவலர்களுக்கு மலரஞ்சலி

திருப்பூரில் உயிர்நீத்த காவலர்களுக்கு மலரஞ்சலி

திருப்பூர், செப்.6- காவலர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் பணியின்போது  உயிர் நீத்த காவலர்கள் நினைவாக மலர் வளையம் வைத்து,  மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம்  நிறைவேற்றப்பட்ட நாளான செப்.6 ஆம் தேதி காவலர் தின மாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதி யாக, திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் அலுவலக வளா கத்தில்  பணியின் போது உயிர் நீத்த காவலர்கள் நினைவாக  மலர் வளையம் வைத்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதை  தொடர்ந்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சி யாக குமரன் சாலையில் உள்ள காவலர்கள் குடியிருப்பில் காவலர் தின விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில்  திருப்பூர் மாநகர காவல் துறையினர் மற்றும் அவர்களின் குடும் பத்தை சேர்ந்த ஆண்கள்,  பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்  என ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டிகளில்  வெற்றி பெற்றவர்களுக்கு மாநகரக் காவல் ஆணையர் ராஜேந் திரன் பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாந கர துணை ஆணையர் பிரவீன் கௌதம், உதவி ஆணையர் கள் மற்றும் காவலர்கள், காவலர்களின் குடும்பத்தார் என  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.