போக்குவரத்து தொழிலாளர்கள் 20 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
திருப்பூர், செப்.6- அரசு போக்குவரத்து ஓய் வூதியர் மற்றும் தொழிலா ளர்களுக்கு அடிப்படை கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி திருப்பூர் மண்டல அலுவலகம் முன்பு 20 ஆவது நாளாக காத்திருக் கும் போராட்டம் தொடர்கி றது. 2003க்கு பின்னர் பணி யில் சேர்ந்த தொழிலாளர்க ளுக்கு பழைய பென்ஷன் திட் டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் 15 மாத நிலுவையில் உள்ள ஓய்வுகாலப் பலன்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஓய்வு பெற்றோர் நல அமைப்பைச் சேர்ந்த கைத்தமலை தலைமை யில், 20 ஆவது நாளாக சனியன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அரசு போக்கு வரத்து ஊழியர் சங்க காங்கேயம் கிளை பொருளாளர் காளிராஜ் துவக்கி வைத்துப் பேசினார். ஓய்வுபெற்றோர் நல அமைப் பின் மாவட்டச் செயலாளர் ஜான்பாலி, டிஆர் இயு முன்னாள் மாநில நிர்வாகி சாம்பசிவம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர் இதில் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.