tamilnadu

img

பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்துப் பாதிப்பு

பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்துப் பாதிப்பு

கோவை, ஆக.14- சாய்பாபா காலனியில் புதிதாக சீரமைக்கப்பட்ட சாலை யில் ஏற்பட்ட பள்ளத்தில் லாரி சிக்கியதால், அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டத் திற்காக பல்வேறு வார்டுகளில் சாலைகள் தோண்டப்பட்டு, புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தோண்டப்பட்ட சாலைகள் முறையாக சீரமைக்கப்படாத தால், திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் சிக்கிக் கொள் ளும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனால் வாகன  ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், புத னன்று சாய்பாபா காலனியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவ லகம் அருகே, இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால், அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர், வாகனங்களை மாற்றுப்  பாதைகளுக்கு திருப்பி விட்டு, பள்ளத்தில் சிக்கிய லாரியை  ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அங்கிருந்து அகற்றினர். மேட்டுப்பாளையம் மேம்பாலப் பணிகளால் பாரதி பார்க்  உள்ளிட்ட சாலைகளில் கனரக வாகனங்கள் செல்வதால், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. உப்பிலிபாளை யம் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையிலும் இதேபோன்ற பிரச்ச னைகள் நீடித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக் கின்றனர். கடந்த இரு மாதங்களுக்கு முன், திருச்சி சாலையில் அரசு மருத்துவமனை அருகே அரசு பேருந்து இதேபோன்ற பள்ளத்தில் சிக்கியதும், ரத்தினபுரி பகுதியில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், 10  நாட்களுக்கு முன் சீரமைக்கப்பட்ட சாய்பாபா காலனி சாலை யில் ஏற்பட்ட பள்ளத்தில் லாரி சிக்கிய சம்பவம், மாநகராட்சி யின் தரமற்ற சாலைப் பணிகளை மீண்டும் வெளிப்படுத்தி யுள்ளது. தரமான முறையில் சாலைகளை சீரமைக்க அதிகாரி கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.