திருப்பூரில் மாதம் ரூ.2 ஆயிரம் கோடி வர்த்தகம் தடைபடும்: 50 சதவிகித வரி விதிப்பால் ஏற்றுமதியாளர்கள் கலக்கம்
திருப்பூர், ஆக. 28 - இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்கா வின் 50 சதவிகித வரி விதிப்பு அமலுக்கு வந்த நிலையில் மாதம் ரூ.2 ஆயிரம் கோடி வர்த்தகம் தடைபடும் என்றும், அமெரிக்கா வுக்கு ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவ னங்கள் கடும் நெருக்கடியை நோக்கி பய ணித்துக் கொண்டிருக்கின்றன என்றும் ஏற்று மதியாளர்கள் தெரிவித்தனர். . திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் ரூ.44 ஆயிரம் கோடியை தாண்டியது. மொத்த ஏற்றுமதியில் 40 சதவிகிதத்திற்கு மேல் அமெரிக்க சந்தைக்கு அனுப்புவதாகும். தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த இந்தியப் பொருட் களுக்கு 50 சதவிகித வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ள நிலையில், இதனால் ஏற்படக்கூ டிய பாதிப்புகள் பற்றி பல்வேறு தகவல்கள் செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்க ளிலும் பரவி வருகின்றன. எனினும் நடை முறையில் இதன் தாக்கம் எந்தளவுக்கு இருக்கும், என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது வரக்கூடிய நாட்களில் நேரடி அனுபவமாகப் புலப்படும் என்று ஏற்றுமதி யாளர்கள் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் திருப்பூர் ஏற்றுமதி யின் மொத்த அளவில் சற்றேறக்குறைய சரி பாதி அளவு அமெரிக்க சந்தையை மையப்ப டுத்தியதுதான் எனும்போது, அதன் பாதிப்பு மிகவும் ஆழமானதாக இருக்கும் என்பதில் ஏற்றுமதியாளர்கள் ஒரே விதமாக ஒப்புக் கொள்கின்றனர். தோராயமாக மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்படக்கூடும் என்று அச்சம் தெரிவிக் கின்றனர். அடுத்து வரும் மாதங்களுக்கு உரிய ஆர்டர்கள் தற்போது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன ஏனெனில் 50 சதவிகித வரி விதிப் பினால் இந்திய உற்பத்தியாளர்கள் மட்டு மின்றி, இங்கிருந்து ஆடைகளைக் கொள்மு தல் செய்யக்கூடிய வர்த்தகர்களும் கூடுதல் விலையை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத் திற்குத் தள்ளப்படுவார்கள் என்பதால், இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே இரு தரப்பினரும் பாதிக்கும் நிலை யில் ஆர்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிற்கு செல்லும் பங்கு சுமார் 20 ஆயிரம் கோடி எனும் போது, அதற்கு ஈடான மாற்றுச் சந்தையை உடனடியாகத் தேடுவ தும் வாய்ப்பில்லை என்றும், மாற்றுச் சந்தையைத் தேடி அதை உறுதிப்படுத்தி, ஆடை உற்பத்தி செய்து அனுப்புவதற்கு குறைந்தபட்சம் ஓராண்டு காலம் ஆகும். அதுவும் உடனடியாக நடக்கக்கூடிய தில்லை. எனவே நெருக்கடி திருப்பூரில் ஒரு சுனாமியாக தாக்கும் என்று ஏற்றும தியாளர்கள் கவலையுடன் கூறுகின்றனர். ஒன்றிய அரசு உடனடியாக இங்கிருக்கும் நிலைமையை கூர்ந்து கவனிப்பதுடன், தொழில் துறையினருடன் கலந்துரையாடி உரிய உதவிகளை செய்ய வேண்டும் என்று தொழில் துறையினர் எதிர்பார்க்கின்ற னர்.