ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தருமபுரி, ஆக.3- விடுமுறை தினமான ஞாயிறன்று, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றலாப் பயணிகள் அருவியில் குளித்தும், பரி சலில் பயணித்தும் மகிழ்ந்தனர். தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வரும், தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட பல் வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணி கள் வந்து செல்வார்கள். இதனிடையே, சனியன்று நில வரப்படி ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், ஆடிப்பெருக்கு தினமான ஞாயிறன்று, விடுமுறை என்ப தால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் லில் குவிந்தனர். மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றின் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்த னர். இதன்பின் பாதுகாப்பு உடை அணிந்து பாறைக ளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக குடும்பத் துடன் பரிசல் சவாரி செய்தனர். ஒகேனக்கல்லில் சுற்று லாப் பயணிகள் அதிகளவில் குவிந்ததால் நடைபாதை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட் டம் அலைமோதியது. இதனால் கடைகள் மற்றும் உண வங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.