tamilnadu

விநாயகர் சதுர்த்திக்கு பணம் கொடுக்காத தொழிலாளியை தாக்கியவர்கள் கைது

விநாயகர் சதுர்த்திக்கு பணம் கொடுக்காத தொழிலாளியை தாக்கியவர்கள் கைது

கோவை, ஆக.27- சரவணம்பட்டி பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கு பணம் கொடுக்காத வட மாநில தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி  கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்து அமைப்புகள் சார்பிலும் தனியார் சார்பிலும் பல்வேறு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதற் காக பொதுமக்களிடம் வசூல் செய்து  சிலை வைப்பது வழக்கம். இந்நிலை யில் கோவை மாவட்டம், சரவணம் பட்டி பகுதியில் உள்ள மில் ஒன்றில்  பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளை ஞர்கள் தங்கி வேலை செய்து வருகின்ற னர். அவர்களிடம் அதே பகுதியில் வசிக் கும் அசோக், திலீப், தினேஷ் ஆகிய இளைஞர்கள், செவ்வாயன்று அந்த பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட பணம் கேட்டுள்ளனர். அப்போது பீகாரை சேர்ந்த விஜய் குமார் ராய் என்பவர் 51 ரூபாய் கொடுத்த  நிலையில், அதை தூக்கி ஏறிந்ததுடன் கூடுதலாக பணம் கேட்டு மூவரும் அவ ரை அடித்து துன்புறுத்தி கொலை மிரட் டல் விடுத்தனர். இந்நிலையில், கட்டாய  வசூல் தொடர்பாக வடமாநில தொழி லாளி விஜய்குமார் ராய் தான் வேலை  பார்க்கும் நிறுவனத்தில் தகவல் தெரி வித்தார். இதனையடுத்து அவர் பணிப் புரியும் நிறுவனத்தின் ஊழியர்கள் உத வியுடன், சரவணம்பட்டி காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தார். இந்த புகா ரின் பேரில் அசோக், திலீப், தினேஷ் ஆகிய 3 பேரை சரவணம்பட்டி போலீ சார் கைது செய்து, நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.  அண்மைக்காலமாக விநாயகர் சதூர்த்தி என்கிற பெயரில் சிலர்,  வியாபரிகள் மற்றும் பொதுமக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதும், பணம்  தராதவர்களிடம் தகறாறு செய்து தாக்கு வதும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. சமூக விரோதிகள் போன்று நடந்து கொள்ளும் இவர்களின் பின்னால் சில  இந்துத்துவ அமைப்பினரின் ஆதரவு  இருக்கிறது என்பதால், அச்சத்தின் கார ணமாக இவர்களை பகைத்துக்கொள்ள  வியாபாரிகளும், பொதுமக்களும் தயங்குகின்றனர். கடவுளின் பெயரால் கல்லாக்கட்டும் இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித பாரபட்சமுமின்றி காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக செயற்பட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.