தார் கலவை ஆலையின் சுவர் இடிந்து விபத்து 9 வீடுகள் சேதம், சிபிஎம் பங்கேற்புடன் மக்கள் போராட்டம்!
உதகை, ஜூலை 29 – நீலகிரி மாவட்டம் நெல்லியாலம் நக ராட்சிக்குட்பட்ட தேவாலா பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பி. ஆர்.சி.சி தார் கலவை ஆலையின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒன்பதுக் கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேத மடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற் படவில்லை. ஆலையின் அத்துமீறல் கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சி யப் போக்கைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லியாலம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா பகுதியில் ஏராளமான குடி யிருப்புகள் உள்ளது. இங்கு பிஆர்சிசி என்கிற தார் கலவை ஆலை இயங்கி வருகிறது. குடியிருப்புகள் அதிகம் உள்ள இந்த பகுதியில், ஆலை இயங்கி வருவதால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால் புற்று நோய், சுவாசக் கோளாறுகள் மற்றும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை போன்ற பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக் கப்பட்டு வருகின்றனர். மேலும், ஆலையின் செயல்பாடுகளால் இது வரை ஒன்பதுக்கும் மேற்பட்டோர் உயிரி ழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. எந்தவித அரசு சட்டதிட்டங்களை யும் இந்த ஆலை நிர்வாகம் பின்பற்றப் படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு உள் ளது. தான்தோன்றித்தனமாக செயல் பட்டு வரும் இந்த ஆலை குறித்து அப் பகுதி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட் சியமாக இருக்கின்றனர். இந்நிலை யில், திங்களன்று, காலை 11 மணியள வில், ஆலையின் உள்ளே மலைபோல் குவிக்கப்பட்டிருந்த ஜல்லிக் கற்களின், பாரம் தாங்காமல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அருகிலிருந்த 9 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த விபத்து அப்பகுதி மக்களி டையே பெரும் அச்சத்தையும் கொந்த ளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்தைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் உட னடியாகப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் தேவாலா கிளையின் நிர்வாகிகள் கூறு கையில், இங்கு சட்டவிரோதமாக இயங் கும் தார் கலவை ஆலையில் அனுமதிக் கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஜல்லி களை குவித்ததன் காரணமாக அதன் சுற்றுச்சுவர் இடிந்து குடியிருப்புகளை கடுமையாக சேதப்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, இவ்வளவு பெரிய விபத்து நடந்து வெகு நேரம் ஆகியும், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளை செய்ய வில்லை. அனுமதிக்கப்பட்டுள்ள அள வுக்கு அதிகமாக மழை போல் குவிக் கப்பட்டிருக்கும் விபத்து ஏற்படுவதற்கு காரணமாக இருந்த ஜல்லிக்கற்களை உடனடியாக அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். எந்நேரமும் விழுந்து மக்களின் உயிருக்கும் உடை மைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் பிஆர்சிசி தார் கலவை ஆலையின் சுற்றுச்சுவரை உட னடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் எந்தவித முறையான முன் அனுமதி யும் இன்றி மக்களின் உயிருக்கு அச் சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக் கின்ற தேவாலா பி ஆர் சி சி தார் கலவை ஆலையை உடனடியாக மக்கள் குடி யிருக்கும் பகுதிகளில் இருந்து மாற்றி மக்களின் உயிரையும் உடமையையும் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்த னர். விபத்து நடந்த தகவலை அறிந்து உடனடியாக, மார்க்சிஸ்ட் கட்சியின் பந்தலூர் ஏரியா கமிட்டி செயலா ளர் ரமேஷ், விவசாய சங்க மாவட்டத் தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான வாசு மற்றும் ஏரியா கமிட்டி உறுப்பினர்கள் சம்பவ இடத் திற்கு சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு ஆறுதலையும், இடிப்பட்ட வீடு களையும் நேரில் சென்று பார்வையிட் டனர். நீலகிரி மாவட்டத்தில் சட்டவிரோத ஆலைகளின் அத்துமீறல்களையும், அதிகாரிகளின் அலட்சியமும், மக் களின் உயிரை காவு வாங்குவதற்கு முன்பு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்தி உள்ளனர்.