அடிப்படை வசதிகளின்றி அல்லாடும் பேரூராட்சி மக்கள்!
சேலம், ஜூலை 31- பனமரத்துப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் குடிநீர், சாலை, தெரு விளக்கு, பொதுக்கழிப்பிடம் உள் ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், பனமரத்துப் பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், மக்கள் தொகைக்கு ஏற்ப சுகாதாரமான குடிநீர் என்பது இல்லை. ஆகவே, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் மேட்டூர் குடிநீர் 24 மணி நேரம் வரு வதை உறுதி செய்ய வேண்டும். காந்தி நகரில் குடியிருப்பு, பேருந்து நிறுத்தம், அரசுப்பள்ளி, அரசு மருத்துவமனை இருக்கும் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ் மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். பனமரத்துப்பட்டி ஏரி பகுதியில் பூங்கா அமைக்க வேண் டும். பனமரத்துப்பட்டி பேரூராட்சிக் குட்பட்ட பகுதி வழியாக வாகனங் கள் மின்னல் வேகத்தில் செல்வ தால் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும். மயானப் பகுதியில் குப்பைக் கொட்டுதை நிறுத்த வேண்டும். ஆட்டையாம்பட்டி பகு தியில் 24 மணி நேரமும் கல் எடுப்ப தால் காற்று மாசுபாடு, நிலத்தடி நீர் பாதிப்பு காரணமாக பொதுமக் கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கல்லெடுக்கும் உரிமையை ரத்து செய்து, கனிம வளங்களை பாது காக்க வேண்டும். மேலும், 13 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய், பொதுக்கழிப் பிடம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி யினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். பனமரத்துப்பட்டி, சந்தைப் பேட்டை அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் குமார் தலைமை வகித்தார். இதில் மாவட்ட அமைப் புக்குழு உறுப்பினர் ஆர்.வைர மணி, பனமரத்துப்பட்டி ஒன்றியச் செயலாளர் செவந்தியப்பன், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.