‘சோகத்தை கடந்து போராட்ட வெற்றியின் குதுகலம்’
தருமபுரி பாலக்கோடு, பெரிய குப்பனூரில் மயானப்பாதை ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி இனைந்து நடத்திய போராட்டத்தால் பாதை மீட்கப்பட்டது. களத்தில் நின்று போராடிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத்தலைவர் முத்துவை, உறவினர் இறந்த சோகத்தையும் கடந்து தோளில் தூக்கிக்கொண்டாடினர். உண்மை கதாநாயகர்கள் திரையில் அல்ல, உங்களுடனே இருக்கிறார்.
