tamilnadu

img

நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளை அரசே நடத்த வேண்டும்

நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளை அரசே நடத்த வேண்டும்

கோவை, அக்.11- நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே ஏற்று நடத்திட  வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப்பணியாளர் கள் சங்கத்தினர் கண், காது, வாய் பொத்தி மெளன போராட்டத்தை மேற்கொண்டனர். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணை யின்படி பணிக்காலமாக முறைப்ப டுத்த வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற மேல்முறையீட்டினை திரும்ப பெற வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைத்திட வேண்டும். நெடுஞ் சாலை பராமரிப்புப் பணியை அரசே  ஏற்று நடத்திட வேண்டும். கிராமப் புற இளைஞர்களை சாலைப்பணி யாளர்களாக பணி நியமனம் செய் திட வேண்டும். உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு  நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணி யாளர்கள் சங்கத்தினர் கண், காது,  வாய் பொத்தி மெளன போராட்டம்,  கோவை- பொள்ளாச்சியில் வெள்ளியன்று நடைபெற்றது.  இந்த போராட்டத்தில், நெடுஞ் சாலைத்துறை கோவை கோட்டப்  பொறியாளர் அலுவலகத்தில்  நடைபெற்ற போராட்டத்தில் கோட் டத் தலைவர் பி.முருகேசன், கோவை கோட்டச் செயலாளர் கே. ரங்கநாதன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். இதேபோன்று பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் நடை பெற்ற போராட்டத்தில் மாநில  பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ்,  கோட்டச் செயலாளர் ச.ஜெகநாதன்,  கோட்டத் தலைவர் சின்னமாரி முத்து உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். இந்த போராட்டங்களில் திரளானோர் பங்கேற்றனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், கோபி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று மாலை நடை பெற்ற போராட்டத்திற்கு, என். முருகவேல் தலைமை வகித்தார்.  கோட்டச் செயலாளர் ரா.கருப்புச் சாமி கோரிக்கைகளை விளக்கிப்  பேசினார். மாநிலச் செயலாளர் எஸ். செந்தில்நாதன் சிறப்புரையாற்றி னார். மா.பழனிவேலு நன்றி கூறி னார்.