தாராபுரத்தில் தமுஎகச மாவட்ட மாநாடு தொடங்கியது
தாராபுரம், அக்.11 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 16 ஆவது மாநாடு தாராபுரத்தில் தோழர் ச.முருகதாஸ் நினைவரங்கத் தில் (உடுமலை ரோடு வேலவர் திருமண மண்டபம்) சனியன்று தொடங்கியது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாட்டின் தொடக்கமாக, எழுத்தாளர் செ.நடேசன், நாவலாசிரியர் குழந்தை வேலு ஆகியோர் நினைவு நுழைவாயி லில், முன்னாள் மாநிலக்குழு உறுப்பி னர் விழிப்பு எம்.நடராஜன் கொடி ஏற்றி வைத்தார். பொது மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணேசன் தலைமை யேற்றார். மாவட்ட துணைத்தலைவர் கி. சீரங்கராயன் வரவேற்றுப் பேசினார். முன்னதாக மாநில செயற்குழு உறுப் பினர் ஆர்.ஈஸ்வரன் அஞ்சலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சங் கத்தின் துணை பொதுச் செயலாளர் அ. லட்சுமிகாந்தன் தொடக்க உரை ஆற்றி னார். கலை இலக்கிய பெருமன்ற திருப் பூர் மாவட்டத் தலைவர் பி.ஆர்.நடரா சன், தாராபுரம் தமிழ் கலை மன்ற தலை வர் மருத்துவர் மா.தங்கராசு, சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டச் செயலாளர் என்.கனகராஜ், தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஆசிரியர் நல சங்க நிர் வாகி க.வனமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், பண்பாட்டு ஆர்வலர்கள் மற்றும் தாராபு ரத்தின் முக்கிய பிரமுகர்கள் இந்த பொது மாநாட்டில் கலந்து கொண்ட னர். இதை தொடர்ந்து கலை பேரணி யும், கலை மாலை நிகழ்ச்சியும் நடை பெற்றது. ஞாயிறன்று பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது.
