அமெரிக்காவின் எல்லைதாண்டிய பயங்கரவாதமே தற்போதைய வரி விதிப்பு
ஈரோடு கருத்தரங்கில் திருப்பூர் எம்.பி,. சுப்பராயன் பேச்சு
ஈரோடு, செப்.14- எல்லை தாண்டிய பயங்கரவா தத்தை, ‘வரி’ என்ற பெயரால் நம் மீது விதிக்கிறார்கள் என, ஈரோட்டில் நடை பெற்ற கருத்தரங்கில் திருப்பூர் எம்.பி,. சுப்பராயன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசு இந்தியா மீது விதித்துள்ள அராஜக வரி விதிப்பைக் கண்டித்து, இடதுசாரி கட்சிகள் சார்பில் ஈரோடு பெரியார் மன்றத்தில் சிறப்புக் கருத்தரங்கம் ஞாயிறன்று நடைபெற் றது. இக்கருத்தரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடா ளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் பேசுகையில், அமெரிக்க நாடு விதித் திருக்கிற வரி தண்டனை. இந்தியா இறையாண்மை உள்ள நாடு. தேவை யான எரிபொருட்களை ரஷ்யாவிட மிருந்து வாங்கியதற்காக நம்மைத் தண்டிக்க அமெரிக்க அதிபருக்கு என்ன உரிமை இருக்கிறது. உலகில் நடை பெற்ற இரண்டு யுத்தங்களில் அமெ ரிக்கா ஈடுபடவில்லை. ஆயுத விற்பனை யில் மட்டுமே ஈடுபட்டுக் கொண்டி ருந்தது. எங்கெல்லாம் போர் நடந்தா லும், இவர்களுக்கு லாபம் தான். அமெ ரிக்காவின் அதிபர்களைத் தீர்மானிப் பதிலும், பொருளாதார புள்ளிகளை தீர் மானிப்பதிலும் ஆயுத வியாபாரிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். எனவே, அவர்கள் உலகை எச்சரிக்கிற, மிரட்டு கிற, வழிநடத்துகிற உயர் பீடம் போல நடந்து கொள்கிறார்கள். லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் அதிபர்களைக் கொன்று இறையாண்மையை சீர் குலைத்தார்கள். கேட்க நாதியில்லை என்பதனால் தான் உலக நாடுகளை அமெரிக்கா மிரட்டிக் கொண்டிருக்கி றது. அமெரிக்காவின் திமிரைத் தடுத்தது சோவியத் யூனியன் சூயஸ் கால்வாய் தேச உடைமை யாக்கிய போது, அதனை எதிர்த்து பிரான்ஸ் உள்ளிட்ட 3 நாடுகள், எகிப்து மீது போர் தொடுத்தன. எகிப்து இறை யாண்மை மிக்க நாடு; சூயஸ் கால் வாயை தேச உடைமையாக்கும் உரிமை அதற்கு உண்டு. ஆகவே, போர் தொடுத்துள்ள நாடுகள் ஆக்கிரமிப்பை திரும்பப்பெற வேண்டும் என சோவி யத் யூனியன் எச்சரித்தது. அதனால், ஆக்கிரமித்த படைகள் பின்வாங்கின. அதேபோல 1971 இல் பங்களாதேஷ் பிரிவினையின் போது, நடைபெற்ற போரை ஒடுக்க அமெரிக்க 7 ஆவது பிரிவு கடற்படை வந்தது. அன்றைய பிரதமர் சோவியத் ரஷ்யாவுடன் பேசி னார். அதை நாங்கள் பார்த்துக் கொள்கி றோம் என்றார் பிரஸ்னேவ். ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் வந்து கொண்டி ருக்கின்றன என்று அறிவிக்கப்பட்டவு டன் அமெரிக்க கப்பல்படை திரும்பிப் போனது. அன்று இறையாண்மை மிக்க நாடுகளை மிரட்டும் அமெரிக்காவின் திமிரைத் தடுத்து நிறுத்தும் வல்லமை படைத்ததாக சோவியத் யூனியன் இருந்தது. இன்றைக்கு இல்லை. அதன் துயரத்தை வரலாறு உணரு கிறது. பாதிக்கப்பட்டவர்கள் உணர் கிறார்கள். அதனால் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வரி என்ற பெயரால் நம் மீது விதிக்கிறார்கள். இந்தியாவில் நகர்ப்புறம் பெருத்தி ருக்கிறது. தமிழ்நாட்டில் நகர்புறம் வேக மாக வளர்ந்து வருகிறது. கிராமப் புறங்கள் செத்து கொண்டிருப்பதால், நகர்ப்புறங்கள் பெருக காரணமாகி றது. 1991 இல் கொண்டு வரப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவு, கிராமங்கள் மடிந்துக் கொண்டிருக்கிறது. தற்போது விவசா யத்துறையில் வளர்ச்சி 3 இல் இரண்டு பங்கு குறைந்துவிட்டது. ஏனென்றால், உணவு தானிய சந்தையில் இருக்கும் இந்திய விவசாயப் பொருளை அப் புறப்படுத்த வேண்டுமானால் இந்திய விவசாயத்தை அழிக்க வேண்டும் என்பது தான் தாராளமயத்தின் கொள்கை. இந்தியாவின் வேலை வாய்ப்பில் 90 விழுக்காடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள்தான். அவை சிறுக சிறுக மடிந்துக் கொண்டி ருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத் தியத்தைக் கட்டித்தழுவுவதில் அக் கறை கொள்கிற மோடி, இந்த வரி விதிப்பைப் பற்றி ஏன் அவர் கவலைப்பட வில்லை. வேலையின்மை சுதந்திர இந்தியாவில் இன்று போல் என்றும் வேலையின்மை அதிகரிக்க வில்லை. இந்த வரி விதிப்பு மேலும் பயங்கரமான வேலையின்மையை அதி கரிக்கும். பொருளாதார நெருக்கடி சட் டம், ஒழுங்கு பிரச்சனைகளைத் தோற்று விக்கும். தீவிர கலகங்களை உரு வாக்கும். இதற்கு மூல காரணம் ஒன்றிய அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைக ளும், தேவைகளைக் காலத்தில் உணர்ந்து தீர்வு காண அக்கரையற்ற போக்குகளும் தான் காரணம். இன்னும் கொடுமை தலைமீது நின்று கொண்டி ருக்கிறது. அதுதான் செயற்கை நுண்ண றிவு. அது மனிதனைப் போலவே இயந் திரத்தை செய்கிறது. இன்னும் 5 வரு டங்களில் நிகழ்காலத்தில் இருக்கிற பணியிடங்களில் 80 விழுக்காடு பணி யிடங்களை ரோபோக்கள் கைப்பற்றி விடும் என்கின்றனர் நிபுணர்கள். கிராமப் புற, நகர்ப்புற வேலைகளைச் செய்வ தற்கும், பேருந்தை ஓட்டுவதற்கும் மனி தன் அவசியமில்லை; இயந்திரங்கள் செய்யும். இதைப்பற்றி பொறுப்புள்ள அரசாங்கங்கள் காலத்தில் சிந்திக்க வேண்டும். தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் வானம் பார்த்த பூமிகள் நிறைய இருக் கிறது. தண்ணீரை வறண்ட நிலத்திற்கு எவன் கொண்டு போய் சேர்க்கிறானோ அவன் தான் சிறந்த அரசன் என்கிறது சங்க இலக்கியம். நதிகளை இணைப் பது அவ்வப்போது பேசப்படுகிறது. ஆனால், நிறைவேற்றப்படுவதில்லை. அதுகுறித்த வழக்கு நீதிமன்றத்திற்கு போனபோது, கமிட்டி அமைத்து ஆய்வு செய்து அறிக்கை சொன்னது. அதன்படி அமைக்கப்பட்ட கமிட்டி ரூ.6.5 லட்சம் கோடி தேவைப்படும் என்றது. எனவே சாத்தியமில்லை என்றனர். மாறாக இணைக்கப்பட்டிருந்தால் வடக்கே வெள்ளத்திற்கும், தெற்கே வறட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். மோடி 11 ஆண்டுகளாக நாட்டு டைமையாக்கப்பட்ட வங்கிகளில் மக்க ளால் சேமிக்கப்பட்ட பணத்தை கார்ப் பரேட் கம்பெனிகள் வாங்கிய கடனை ரத்து செய்கிறோம் என்று ரூ.25 லட்சம் கோடியை ரத்து செய்தார். நதிகளை இணைக்க அக்கரை காட்டவில்லை. இந்த அரசு மக்களைப் பற்றி கவ லைப்படவில்லை. இவ்வாறு அவர் பேசி னார்.