இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) தருமபுரி மாவட்ட 13 ஆவது மாநாட்டுப் பேரணி வெள்ளியன்று, பாப்பாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே துவங்கி முக்கிய கடை வீதி வழியாக சென்று பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது. இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநிலத் துணை பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்டத் தலைவர் சி.நாகராசன், செயலாளர் பி.ஜீவா, பொருளாளர் சி.கலாவதி உள்ளிட்டோர் உரையாற்றினர்.