tamilnadu

img

விருதோடு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை பள்ளி வளர்ச்சிக்கு வழங்கிய ‘நல்லாசிரியர்’

விருதோடு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை பள்ளி வளர்ச்சிக்கு வழங்கிய ‘நல்லாசிரியர்’

தருமபுரி, செப்.12- நல்லாசிரியர் விருதோடு  வழங்கப்பட்ட பரிசுத்தொ கையை, பள்ளி வளர்ச்சிக்கு வழங்கிய ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட் டது. தருமபுரி மாவட்டம், ஏரி யூர் அருகே உள்ள இராம கொண்டஅள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. 380 மாணவ, மாணவிகள் படித்து வரும் இப்பள்ளியில் பணியாற்றி வரும் தமிழ் ஆசிரியர் சுப்ரமணிக்கு, தமிழ் நாடு அரசு வழங்கும் மாநில அரசின் ‘நல்லாசி ரியர்’ விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு பாராட்டு தெரிவித்தும், காமராஜர் விருது மற்றும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளியை பாராட்டியும் முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலை வர் கிருஷ்ணன், பள்ளி மேலாண்மைக்குழு  தலைவர் கலைவாணி ஆகியோர் முன்னிலை  வகித்தனர். இந்நிகழ்ச்சியில், நல்லாசிரியர் விருது பெற்ற சுப்ரமணி, மாநில அரசு வழங் கிய பரிசுத்தொகையான ரூ10 ஆயிரத்துடன், ரூ.501 சேர்த்து, பள்ளி வளர்ச்சிக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.