மேல்முறையீடு செய்து காலம் கடத்தும் டாஸ்மாக் நிர்வாகம்
கோவை, செப்.8- டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தி னர் (சிஐடியு) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தேர்தல் அறிக்கை எண் - 153 வை நிறைவேற்ற வேண்டும். நீதி மன்ற உத்தரவுப்படி மேல்முறை யீடு செய்யாமல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என தமிழகம் முழுவதும் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே டாஸ்மாக் ஊழியர்கள் சங் கம் (சிஐடியு) மாவட்டத் தலைவர் ஜான் அந்தோணி ராஜ் தலைமை ஏற்றார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி, டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாவட் டச் செயலாளர் கே.செந்தில் பிரபு, பொருளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். ஈரோடு ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ் மாக் ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பொன்.பாரதி தலைமை வகித்தார். பொதுச் செய லாளர் கே.ரவிச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் கே.மாரப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். திரளானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் நிறை வாக சங்கத்தின் பொருளாளர் அர்த் தநாரீஸ்வரன் நன்றி கூறினார்.