அடிப்படை வசதிக்கு ஏங்கும் வட்டாட்சியர் அலுவலகம்
தருமபுரி, செப். 6 – நல்லம்பள்ளி வட் டாட்சியர் அலுவல கத்தில் போதிய அடிப் படை வசதிகள் இல்லா லாததால், அரசு சான்றி தழ்கள் மற்றும் பிற தேவைகளுக்காக வரும் பொது மக்கள் கடும் சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர். இதனால் உடனடியாக அடிப்படை வசதி களை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லம்பள்ளி சந்தை வளாகம் அருகே செயல்பட்டு வரும் இந்த வட்டாட்சியர் அலுவலகம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட 32 ஊராட்சிகள் மற்றும் சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சேவை அளித்து வருகிறது. தண்டுக்காரம்பட்டி, பாளையம் புதூர், இண்டூர், மதேமங்கலம், தொப்பூர், ஏலகிரி, சிவாடி, நாகர்கூடல், கம்மம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து தினமும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். நீண்ட தூரத்திலிருந்து வரும் பொதுமக்களுக்கு குடிநீர் மற் றும் கழிவறை போன்ற அடிப் படை வசதிகள் இங்கு முறை யாக இல்லை. கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் இருப் பதாகவும், குடிநீர் வசதி இல்லா ததால் கடும் சிரமங்களை எதிர் கொள்வதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வட்டாட்சியர் மற்றும் பிற அதி காரிகளை சந்திக்க காத்திருக் கும் பொதுமக்களுக்கு அமர் வதற்கு போதிய இடவசதியும் இல்லை. அலுவலகத்தை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால், விஷப் பூச்சிகள் மற்றும் இதர பூச்சி களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். எனவே, வட் டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு அவ சியமான குடிநீர் வசதி, சுகாதார மான கழிப்பறை வசதி மற்றும் காத்திருப்பு அறை அமைத்துத் தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். மாவட்ட நிர்வாகம் இதற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.