tamilnadu

லஞ்சம் பெற்ற விவகாரம் வட்டாட்சியர் பணியிடை நீக்கம்

லஞ்சம் பெற்ற விவகாரம் வட்டாட்சியர் பணியிடை நீக்கம்

கோவை, ஜூலை 30- கோவையில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம்  பெற்ற வழக்கில் கைதான பேரூர் வட்டாட்சியர் உள்பட இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த  ரஞ்சித்குமார், பழனிச்சாமி என்பவருக்காக பேரூர் வட்டாட்சி யர் அலுவலகத்தில் கடந்த மாதம் 19 ஆம் தேதி சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.  விண்ணப்பத்தை கீழ் நிலை அலுவலர்கள் சரி பார்த்த நிலை யில், வட்டாட்சியர் ரமேஷ் குமாரின் இறுதி ஒப்புதலுக்காக நிலு வையில் இருந்தது. இதனால் ரஞ்சித் குமார் பேரூர் வட்டாட் சியர் ரமேஷ்குமாரை நேரில் சந்தித்து, சொத்து மதிப்பு சான் றிதழ் வழங்கும்படி கேட்டுள்ளார். அப்பொழுது ரமேஷ்  குமார் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு ரஞ்சித்குமார் பணம் தர இயலாது என்று தெரி வித்தார். ஆனாலும் ரூபாய் ஐம்பதாயிரம் கொடுத்தால் மட்டும்  சான்றிதழ் தர முடியும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து ரஞ்சித் குமார் கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறை யினர் ரஞ்சித் குமாரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டு களை கொடுத்தனர். ரஞ்சித் குமார் சம்பவத்தன்று அந்த ரூபாய் நோட்டுக்களை வட்டாட்சியரின் உதவியாளரான சர வணனிடம் கொடுத்தார். உடனே அங்கு மறைந்திருந்த  லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வட்டாட்சியர் ரமேஷ் குமார்,  உதவியாளர் சரவணன் ஆகிய இரண்டு பேரையும் கைது  செய்தனர். இந்நிலையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பேரூர் வட்டாட்சியர் ரமேஷ் குமார், உதவியாளர் சர வணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சி யர் பவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.