பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாணவர் சங்கத்தினர் பிரச்சாரம்
நாமக்கல், அக்.9- இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாமக்க லில் 9 இடங்களில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் பாலஸ்தீன மக்க ளுக்கு ஆதரவாக 9 இடங்களில் இந்திய மாண வர் சங்கத்தினர் புதனன்று பிரச்சாரம் மேற் கொண்டனர். அதில் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை தாக்கு தலை நிறுத்த வேண்டும் என்ற தலைப்பில், புதுப்பாளையம் காக்காபுரி நாமகிரிப் பேட்டை அலுவலகம் ஆகிய நான்கு இடங் களிலும், ராசிபுரம் அரசு கலைக்கல்லூரி, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, நாமக்கல் சட்டக் கல்லூரி ஆகிய நான்கு இடங் களில் கருத்து பிரச்சாரம் இயக்கம் நடைபெற் றது. தொடர்ந்து பாலஸ்சீனத்தில் இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலால் உயிரிந்த குழந்தைகள் மாணவர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மோகனூர் பகுதியில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் தங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர் நிசார், யாழினி, தனுஷ், மாவட்ட இணை செயலாளர்கள் பச்சமுத்து, சதீஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கவின், கன்னிகா, முஜீப், மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
