நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: 10,255 நபர்கள் பயன் பெற்றுள்ளதாக தகவல்
உடுமலை, அக்.4- திருப்பூர் மாவட்டத்தில் இது வரை நடைபெற்றுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களில் 10 ஆயிரத்து 255 பேர் பயன்பெற்றுள்ளனர் என தெரிவிக் கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடும லைப்பேட்டை வட்டம் பெரியவாள வாடி நாராயணசாமி அரசு மேல்நி லைப்பள்ளியில் சனியன்று மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்து றையின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடை பெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே பார்வையிட் டார். அப்போது அவர் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 7 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாமிலும் 1000க்கும் மேற்பட்ட பய னாளிகள் பயனடைந்துள்ளனர்.வெள்ளகோவில் வட்டாரத்தில் 1068 பேர், திருப்பூர் மாநகராட்சியில் 1272 பேர், பல்லடம் வட்டாரத்தில் 1670 பேர், திருப்பூர் பெருமாநல்லூர் வட் டாரத்தில் 1258 பேர், சின்னக்காம்பா ளையம் வட்டாரத்தில் 1704 பேர், மூலனூர் வட்டாரத்தில் 1458 பேர், காங்கேயம் வட்டாரத்தில் 1,793 பேர் என இதுவரை மொத்தம் 10 ஆயிரத்து 255 நபர்கள் பயன்பெற் றுள்ளனர். அந்த வகையில் சனி யன்று உடுமலைப்பேட்டை வட்டம் பெரியவாளவாடி நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது என மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரி வித்துள்ளார். இம்முகாமில், மாவட்ட சுகாதார அலுவலர் ஜெயந்தி. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மருத் துவர்கள் மற்றும் துறை சாரந்த அலு வலர்கள் கலந்து கொண்டார்கள்.
