tamilnadu

பெருமாநல்லூரில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

பெருமாநல்லூரில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

திருப்பூர், ஆக. 28 – திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் ஆகஸ்ட் 30 ஆம்  தேதியன்று நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறு கிறது. பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெ றும் இம்முகாமில் பல்வகை சிறப்பு மருத்துவ சேவைகள்,  புற்று நோய் கண்டறியும் பரிசோதனைகள், முதல்வரின் விரி வான மருத்துவக் காப்பீடு அட்டை வழங்குதல், அமைப்பு  சாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கு தல், இரத்தப் பரிசோதனை, ஈசிஜி, எக்கோ, எக்ஸ் ரே, யுஎஸ்ஜி  மற்றும் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து பரிசோ தனைகளும் செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்  இம்மருத்துவ முகாமிற்கு பல்வேறு சிறப்பு மருத்துவ நிபுணர் கள் வருகை தந்து மருத்துவ சேவை அளிக்கின்றனர். இணை யதளம் வழி மாநில, மாவட்ட அளவில் கண்காணிக்கப்படும். மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய் யப்படும். ஆதார் அட்டையுடன் பொது மக்கள் பங்கேற்று பய னடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே  தெரிவித்துள்ளார்.