tamilnadu

குற்றங்களைத் தடுக்க ‘ஸ்மார்ட் காக்கிஸ்’ திட்டம்

குற்றங்களைத் தடுக்க ‘ஸ்மார்ட் காக்கிஸ்’ திட்டம்

கோவை, ஜூலை 11– கோவை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தவும், காவல்துறையின் கண் காணிப்பை மேம்படுத்தவும் “ஸ்மார்ட் காக்கிஸ்” என்ற புதிய திட்டத்தை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் கார்த்திகேயன் வெள்ளி யன்று துவக்கி வைத்தார்.  கோவை ஆயுதப்படை வளாகத் தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அதிநவீன வசதிகளுடன் கூடிய 33  புதிய ரோந்து வாகனங்கள் அறிமு கப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில், குற்றத்தடுப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்கில் 33 இருசக்கர வாகனங்கள் ரோந்துப் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங் களில் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடும் போது, அவர்களின் இருப் பிடத்தைக் கண்டறிய ஜிபிஎஸ் கருவி கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அவசர சூழ்நிலைகளில் பொதுமக் கள் கவனத்தை ஈர்க்க சைரன் கருவி கள் பொருத்தப்பட்டிருப்பதுடன், இரண்டு காவலர்கள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள் ளது. ரோந்துப் பணியில் ஈடுபடும் ஒரு  காவலரிடம் வாக்கி டாக்கி மற்றும்  கண்காணிப்பு கேமரா வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இது நிகழ்நேர தகவல்களை பரிமாறிக் கொள்ள வும், குற்றச் சம்பவங்களை பதிவு செய்யவும் உதவும். இந்த 33 புதிய வாகனங்களில், மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு புறநகர் காவல் நிலை யத்திற்கும் தலா ஒரு வாகனம் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பொள்ளாச்சி, சூலூர், அன்னூர்  போன்ற பகுதிகளில் குற்றச் சம்பவங் களைக் கட்டுப்படுத்த சிறப்பு கவ னம் செலுத்தப்பட்டு, அங்குள்ள காவல் நிலையங்களுக்கு தலா இரண்டு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தைத் துவக்கி வைத்து மாவட்ட காவல் கண்காணிப் பாளர் கார்த்திகேயன் பேசுகையில், “இந்த ‘ஸ்மார்ட் காக்கிஸ்’ திட்டம்  குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கும், பொதுமக்கள் மத்தியில் காவல் துறையின் இருப்பையும், கண்கா ணிப்பையும் உறுதி செய்வதற்கும் பெரிதும் உதவும். பொதுமக்கள் அதி கம் கூடும் இடங்களில் இந்த ரோந்து  குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் குற்ற வாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபட  தயங்குவார்கள். அதுமட்டுமின்றி, எங்கேயாவது ஒரு குற்றச் சம்பவம் நடந்தால், இந்த ரோந்து வாகனங்கள் விரைவாக சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கை எடுக்க உதவி யாக இருக்கும். காவல்துறையினர் பொதுமக்களிடம் கண்ணியத்துட னும், கனிவுடனும் நடந்து கொள்ள  வேண்டும். அதேசமயம், குற்றச் சம்ப வங்களை மிக கவனமாகவும், தீவிரமாகவும் கையாள வேண்டும். இது குறித்து காவலர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளும், வகுப்பு களும் நடத்தப்பட்டுள்ளதாக தெரி வித்தார். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை மேலும் அவர் கூறுகையில், மாவட்ட அளவில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகி றது. அண்மையில், கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கடத்தப்படவிருந்த 235 கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, சம் பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடி யாக கைது செய்யப்பட்டனர், என் றார்.