tamilnadu

img

கீழடியில் 11ஆவது கட்ட அகழாய்வு நடத்த ஒன்றிய தொல்லியல்துறை அனுமதி!

கீழடியில் 11ஆவது கட்ட அகழாய்வு நடத்த மாநில தொல்லியல் துறைக்கு ஒன்றிய தொல்லியல்துறை அனுமதி அளித்துள்ளது. 
தமிழ்நாட்டில் கீழடி உள்பட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்த ஒன்றிய தொல்லியல்துறை அனுமதி அளித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டினமருதூர், தென்காசி மாவட்டத்தில் உள்ள கரிவலம்வந்தநல்லூர், கடலூர் மாவட்டத்தில் உள்ள மணிக்கொலை, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதிச்சனூர், கோவை மாவட்டத்தில் வெள்ளலூர், சேலம் மாவட்டத்தில் தெலுங்கானா-மாங்காடு மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்த கடந்த மார்ச் 13-ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது!
அடுத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.