கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி கட்ட எதிர்ப்பு
அவிநாசி, செப்.24- திருமுருகன்பூண்டி நல்லாற்றில் உரிய அனுமதி பெறாமல் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி கட்டுவதற்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டி நகராட்சி, 10 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் நல்லாறு அமைந்துள்ளது. இந்த ஆற்றை தூய்மைப்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில், நல் லாற்றின் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், நல் லாற்றை தூய்மைப்படுத்த மனு அளிக்கப்பட்டு, பொதுப் பணித்துறை மதிப்பீடு தயார் செய்து நிதி கேட்டு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், தூய்மைப்படுத்தாமல், கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி அமைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல், பொதுமக்களுக் கும் பாதிப்பு ஏற்படும். எனவே, பொதுமக்கள் பாதிக்காத வகையில், வேறு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டி அமைக்க வேண்டும். மேலும், இத்தொட்டி கட்டு வதன் மூலம் நல்லாற்றில் மண் திருடப்பட்டுவதாக பொதுமக்கள் கருதுகின்றனர். இதுகுறித்து உரிய விசா ரணை மேற்கொள்ள வேண்டும், என்றார்.