tamilnadu

உள்நாட்டு மீனவர்களுக்கான கருத்தரங்கம்

உள்நாட்டு மீனவர்களுக்கான கருத்தரங்கம்

ஈரோடு, ஜூலை 11– மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின் சார்பில் உள்நாட்டு மீன்வள திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு வியாழ னன்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  உள்நாட்டு மீனவர்களுக்கான விழிப்பு ணர்வு கருத்தரங்கம் ஈரோடு மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ் வில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள மக் கள் அனைவரும் தன்னிறைவு அடையும்  வகையில் மீன் உற்பத்தியை பெருக்க வேண் டும். மீன்வளர்ப்போர் மீன்வளத்துறையின் திட்டங்களில் சேர்ந்து பயனடைய வேண் டும், என்றார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் வ.அப்துல் காதர் ஜெயி லானி பேசுகையில், மாவட்டத்தில் மீன் உற் பத்தியை அதிகரிப்பதற்கு துறையால் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். இதில் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்ட மைப்பு மேம்பாட்டு நிதி, தகுதியுள்ள மீன வர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விவசாய கடன் அட்டை வழங்குதல், மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மீனவ மகளி ரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட கொண்டு வரப்பட்ட “அலைகள் திட்டம்”, மற் றும் மீன் உற்பத்தியாளர் சங்கங்கள் ஆகிய திட்டங்கள் குறித்து பேசினார். ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் ஸ்டாலின், இதுவரை உவர்நீர் குளங்களில் மட்டுமே வளர்க்கப் பட்டு வந்த கொடுவா மீனை தற்போது நன்னீர் குளங்களிலும் வளர்க்கும் முறை குறித்து விளக்கமளித்தார். அவரைத் தொடர்ந்து, மீன் வள ஆய்வாளர் மு.ரெஜினா ஜாஸ்மின், பயோ பிளாக் முறையில் மீன்வளர்ப்பு குறித்த வழி முறைகளை எடுத்துரைத்தார்.