அறிவியல்பூர்வ ஆய்வுகளே சமூக மாற்றத்திற்கு வழி
திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை வானவில் மன்றம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் காங்கே யம் கல்வி நிறுவனங்கள் இணைந்து மாணவ, மாணவியருக்கான அறிவியல் கணித திருவிழாவை நடத்தினர். மாண வர்களை அறிவியல், கணிதத்தின் பால் ஈர்ப்பதற்கு இந்த விழா சிறப்பாக பங்க ளித்தது. திருப்பூரின் மாபெரும் அறிவுத் திருவிழா: இன்று உயர்கல்வியில் அடிப்படை அறிவியல் மற்றும் கணித பிரிவு பாடங் களை மாணவர்கள் தேர்ந்தெடுப்பது குறைந்து வருவதாக பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்கள் சுட்டிக்காட்டு கின்றன. இச்சூழலில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் அறிவியல் கணிதம் வெறும் பாடங்கள் மட்டுமல்ல, நம் அன்றாட வாழ்வின் அங்கம் என் பதை உணர்த்தும் வகையில் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து தமிழ் நாடு அறிவியல் இயக்கம் ஆறாம் வகுப்பிலிருந்தே வானவில் மன்றம் (நட மாடும் அறிவியல் ஆய்வகம்) மூலம் அறிவியல் கூற்றுகள், கணித தேற்றங் களை எளிமையாக தொட்டு, உணர்ந்து, பார்த்து, செய்தறிந்து கற்று உணரும் செயல்பாடுகளை பள்ளி மாணவர்க ளுக்கு கற்பித்து வருகின்றனர். இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் அறி வியலில் மாணவர்களின் படைப்பாற்றல் திறன் வளர்ந்து வருவது அதிகரித்துள் ளது. இதன் உச்சமாக, திருப்பூர் மாவட் டம் காங்கேயம் நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற அறிவியல் கணிதத் திரு விழா மெய்ப்பித்துள்ளது. திருப்பூரின் மாபெரும் அறிவுத் திருவிழாவாக, அன்றாட வாழ்வில் அறிவியல் மற்றும் கணித புதுமைகள் என்ற தலைப்பில் 530 ஆய்வு படைப்புகளை ஆயிரத்திற் கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சமர்ப்பித்துள்ளனர். விஞ்ஞானியுடன் சந்திப்பு: சென்னை சவிதா பல்கலைக்கழக புதுப்பிக்கதக்க ஆற்றல் துறை விஞ்ஞா னியும் பேராசிரியருமான அசோக்குமார் பங்கேற்று, பள்ளிப் பருவத்திலேயே அறிவியல் ஆய்வுகளை செய்ய இது போன்ற அறிவுத் திருவிழா மேடைகளை ஒவ்வொரு மாணவரும் பயன்படுத்திக் கொண்டு தங்கள் அறிவை விரிவு செய்ய முடியும் என்பதை அழுத்தமாக எடுத்துரைத்தார். கல்வி ஒன்றே உங் களை உயர்த்தும், தற்போது நாம் அனைவரும் எதிர்கொள்ளும் பெரும் சவால் காலநிலை மாற்றமும், சுற்றுச்சூ ழல் பாதிப்புகளும். இதில் குறிப்பிடத் தகுந்தது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் புதுமை கண்டுபிடிப்புகள். அதனை அறி வுத் திருவிழாவில் ஏராளமான மாண வர்கள் முயற்சி செய்திருப்பது பாராட் டுக்குரியது. அதேபோல ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாடுகளுக்கு மாற்றாக பயோ பிளாஸ்டிக் வழிமுறைகளுக்கான ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுட்டிக் காட்டினார். ஆகாயத்தாமரை இனி சுமையல்ல: தற்போது ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் படர்ந்திருக்கும் ஆகா யத்தாமரையை அப்புறப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. இந்தத் தாவரம் இனி சுமையல்ல புதுப்பிக்கத் தக்க மூலப்பொருளாக மாறப்போகிறது என ஆய்வில் கண்டறிந்துள்ளோம். இதனை கொண்டு மக்கும் பயோ பாலித்தின் தயாரிக்கலாம் என்றார். கல்வி உதவித் தொகை : இந்த கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பாராட்டு சான்றிதழ், பதக்கங்கள் வழங் கப்பட்டன. ஜுனியர் 6-8, சீனியர் 9-10, சூப்பர் சீனியர் 11- 12 என மூன்று பிரிவு களில் பங்கெடுத்து முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு முறையே ரூ. 5000, ரூ.3000 மற்றும் ரூ.2000 கல்வி உதவித் தொகையாக கல்லூரி நிறுவ னம் சார்பில் வழங்கி ஊக்கப்படுத்தினர். அறிவியல் பூர்வமான ஆய்வுகளே இன்றைய தேவை : ஆய்வுகள் என்ற பெயரில் சமூக ஊடகங்களில் அறிவியலுக்கு புறம்பான பல தகவல்கள் உலவிவரும் சூழலில், அறிவியல் மனப்பான்மை கொண்ட அறிவியல் பூர்வமான ஆய்வுகளை ஊக் கப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ந்து களப்ப ணியாற்றி வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையும் உறு துணையாக வானவில் மன்றம் போன்ற மன்ற செயல்பாடுகளின் மூலம் ஊக்கப் படுத்துகிறது. திருப்பூரில் நடைபெற்ற அறிவியல் கணித திருவிழா தமிழ்நாட் டில் முன்மாதிரியான ஒரு அறிவுத் திரு விழாவாக திகழும் என எதிர்பார்ப்பதாக அறிவியல் இயக்க திருப்பூர் மாவட்ட செயலாளர் கெளரிசங்கர் கூறினார். (ந.நி)