tamilnadu

img

ஊரக வளர்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா

ஊரக வளர்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா

தருமபுரி, செப்.14- நல்லம்பள்ளி ஊராட்சி மன்ற வளாகத்தில், ஊரக வளர்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில், மரக்கன்றுகள் நடவு செய்யப் பட்டன. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் சார் பில், நல்லம்பள்ளி ஊராட்சி மன்ற வளாகத்தில் 200 மரக்கன்று கள் நடும் நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில  துணைத்தலைவர் ச. இளங்குமரன் தலைமை வகித்தார். ஊராட்சிகள் உதவி இயக்குநர் விமல் ரவிக்குமார், இந் நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வே.தருமன், பொருளாளர் வினோத்  குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பிரின்ஸ், அரசு ஊழியர்  சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதான், வட்டார வளர்ச்சி  அலுவலர் நீலமேகம், ஓய்வுபெற்றோர் அமைப்பின் நிர்வாகி கள் கேசவன், நந்தகோபால், தூய்மைப் பணியாளர் சங்க  செயலாளர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.