tamilnadu

img

சாலைகள் சீரமைப்புப் பணிகள்: ஆட்சியர், ஆணையர் ஆய்வு

சாலைகள் சீரமைப்புப் பணிகள்:  ஆட்சியர், ஆணையர் ஆய்வு

கோவை, ஆக.31- கோவையில், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட் டப்பணிகளால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும்  பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணை யர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். கோவை மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்  பணிகளால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலை யில், இப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர்  மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் ஞாயிறன்று நேரில்  ஆய்வு செய்தனர். பணிகளை உடனடியாக மேற் கொள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட தொடர் புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும், மேட்டுப்பாளையம் சாலையில், சாய்பாபா காலனி அருகே தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில்  ரூ.52 கோடி மதிப்பீட்டில் 1.2 கி.மீ நீளத்திற்கு மேம் பாலம் கட்டும் பணிகளையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தி னார். இந்நிகழ்வில், மாநகராட்சி தலைமைப் பொறியா ளர் விஜயகுமார், உதவி ஆணையர்கள் முத்துசாமி,  துரைமுருகன், தேசிய நெடுஞ்சாலைத் துறை கோட்டப்  பொறியாளர் தனபால், மாநில நெடுஞ்சாலைத் துறை  கோட்டப் பொறியாளர் ஞானமூர்த்தி உட்பட பலர் கலந்து  கொண்டனர்.