tamilnadu

img

கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்ட அறிக்கையை பெற்றுத் தர சு.வெங்கடேசன் எம்பி.,யிடம் கோரிக்கை

கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்ட அறிக்கையை பெற்றுத் தர சு.வெங்கடேசன் எம்பி.,யிடம் கோரிக்கை

திருப்பூர், செப்.2- கோவை கிழக்கு புறவழிச்சாலை பாதிப்பு  குறித்தும், முழுதிட்ட விவர அறிக்கை பெற் றுத்தர செவ்வாயன்று திருப்பூர் வந்திருந்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசனிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர் மனு அளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்  ஆர்.குமார், துணைத் தலைவர் வை.பழனிசாமி, விவசாயிகள் பூமலூர் விஜய், கிடாத்துறைப்புதூர் முரு கேசன், சென்னியப்பன் உள்ளிட்டோர்  அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப் பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், செம்மி பாளையம் பகுதியில் துவங்கி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வரை புதிதாக கோவை கிழக்கு புறவழிச்சாலை திட் டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவரு கிறது. அதற்கு டிஜிட்டல் நில அளவை செய் யப்பட்டு, தார் சாலையில் அதற்கான குறியீடு கள் ஆங்காங்கே இடப்பட்டுள்ளது. இது பற்றி  தகவல் அறிந்த பல்லடம் வட்டம் செம்மிபா ளையம், சுக்கம்பாளையம், நடுவேலம்பா ளையம், பள்ளிபாளையம், கிடாதுறைபுதூர்,  காளிபாளையம், சாமளாபுரம் கிராமங்க ளைச் சேர்ந்த விவசாயிகள் நில உரிமையா ளர்கள் முழுமையான விவரம் அறிய முடியா மல் பதற்றத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் குறுக்கும் நெடுக்குமாக ஏராளமான சாலைகள் உள் ளன. அதில் தேவையான சாலைகளை அக லப்படுத்தி போக்குவரத்தை விரைவுப டுத்திக் கொள்ளலாம். அதை கணக்கில் கொள்ளாமல் சுமார் 1400 ஏக்கர் நிலத்தை ஆர் ஜிதம் செய்து இந்த சாலை திட்டத்தை உரு வாக்குவது சரியானதல்ல.  உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத் தால் ஏராளமான சிறு, குறு, நடுத்தர விவசா யிகளின் நிலங்கள் பறிபோய் வாழ்வாதா ரத்தை இழந்து நிற்க வேண்டிய நிலை ஏற்ப டும். எனவே கோவை கிழக்கு புறவழிச்சாலை  திட்டத்தை மத்திய, மாநில அரசாங்கங்கள் உடனடியாக கைவிட வேண்டும் என விவசா யிகள் கோரி வருகின்றனர்.  எனவே தாங்கள் தலையிட்டு, இந்த திட்டம் குறித்து முழுமையான விவரங்கள் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஆணை யம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை  ஆணையம் மூலம் பொதுமக்கள் அறியும்  வகையில் உரிய விவரங்களை பொதுவெளி யில் வெளியிட ஆவண செய்ய வேண்டும் என  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாவட் டச் செயலாளர் சி.மூர்த்தி  ஆகியோர் உடனி ருந்தனர்.