விசைத்தறித் தொழிலை மேம்படுத்த கோரிக்கை
நாமக்கல், ஆக.21- நலிந்து வரும் விசைத்தறித் தொழிலை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக இயங்கும் கைத் தறி நெசவுத் தொழில், கடந்த 10 ஆண்டு களாக பல்வேறு இடர்பாடுகளை சந் தித்து வருகிறது. நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், விரு துநகர் உள்ளிட்ட 10 மாவட்டத்தில் வசிக் கும் மக்களின் மிக முக்கிய தொழிலான விசைத்தறி, நாளுக்கு நாள் நலி வடைந்து வருகிறது. ஜவுளி ஏற்றுமதி குறைவு, ஜிஎஸ்டி, சாயக்கழிவு பிரச் சனை, ரக கட்டுப்பாடு சட்டம், நூல் விலை ஏற்றம் உள்ளிட்ட பல பிரச்சனை கள் காரணமாக நெசவுத்தொழிலின் நிலை இனிவரும் காலங்களில் என்ன ஆகுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. விசைத்தறிக் கூடங்கள் 50 சதவிகிதம் மூடப்பட்டிருப்பதை பல்வேறு ஊர்க ளில் காண முடிகிறது. உரிய வருமானம் கிடைக்காத நிலையால் பலரும் மாற்றுத் தொழிலை நாடிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே உற்பத்தி யாகியுள்ள லுங்கி, டவல், வேட்டி, சேலை போன்ற ஜவுளி ரகங்கள் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு விற்க முடி யாத நிலையில் தேக்கமடைந்துள்ளது. இதனால் தொடர்ந்து விசைத்தறிக் கூடங்களை இயக்க முடியாத அள விற்கு நிதி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீழ்ச்சிய டைந்த நெசவுத்தொழில் அதிலிருந்து மீள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு ஆர்டர் இல்லாததால் விசைத்தறியாளர்கள் உள்நாட்டு ஜவுளி களை மட்டுமே தயார் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வெளிநாட் டுக்கு அனுப்பும் ஜவுளிக்கு ஏற்றுமதி ஆர்டர் ஏற்படுத்தித்தர ஒன்றிய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி-யை முற்றிலுமாக ரத்து செய்ய வேண் டும். ரக கட்டுப்பாடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சாயக்கழிவு பிரச் சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும். நூல் விலை ஒரே சீராக இருக்க கண் காணிப்புக்குழு ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.