விபத்துகளை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கக் கோரிக்கை
திருப்பூர், ஆக.6- ஊத்துக்குளி ரயில்வே சாலையிலி ருந்து செட்டிபாளையம் செல்லும் சாலையில், போக்குவரத்து நெரிச லைத் தவிர்க்கும் வகையிலும், விபத்து களைக் குறைக்கும் வகையிலும் தடுப் புச்சுவர் அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப் பட்டுள்ளது. அம்மனுவில், ஊத்துக்குளி பேரூ ராட்சி, ஊத்துக்குளி ரயிலடி முதல் செட்டிபாளையம் செல்லும் சாலையில் அதிக வாகனப் போக்குவரத்து நடை பெற்று வருகிறது. குறிப்பாக ஊத்துக் குளி - சென்னிமலை சாலை ரயில்வே நுழைவு பாலம் அடைக்கப்பட்டுள்ள தால், சென்னிமலை சாலையிலிருந்து காங்கேயம் சாலையை இணைக்க வாகன ஓட்டிகள் இச்சாலையை பயன்ப டுத்தி வருகிறார்கள். இதனால் அதிக மான கனரக வாகனங்கள், டெம்போ, கார், இருசக்கர வாகனங்கள் செல்வ தால் அடிக்கடி தார் சாலையில் ஒதுங்கு வதற்கு போதிய இட வசதி மற்றும் கடை கால் இல்லாததால், இருபுறமும் செல் லும் வாகனங்கள் ஒதுங்க இடமில்லா மல் வாகனங்கள் சிக்குண்டு போக்கு வரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மீண் டும் போக்குவரத்து சீராக பல மணி நேரம் ஆகிறது. குறிப்பாக சின்ராசு கடை முதல் கே.கே.நகர் பிரிவு வரை இருபுறமும் வாகனங்கள் ஒதுங்கினால் பள்ளத்தில் விழுந்து விடும் அபாயம் உள்ளது. இத னால் மனித உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. செட்டிபாளையம், மாரநாயக்க னூர், குன்னம்பாளையம், கேகே நகர், செந்தில் நகர், ராமமூர்த்தி நகர், சரஸ் வதி நகர், நடுத்தோட்டம், தோப்புத் தோட்டம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்தச் சிக்கலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில், ஊத்துக்குளி ரயில்வே சாலையிலிருந்து செட்டிபா ளையம் செல்லும் சாலையில், தோப்புத் தோட்டம் டி.ஆர் குடோன் முதல் அரு ணாச்சலம் காம்பவுண்ட் கேட் வரை, இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என அந்த மனுவில் வலியு றுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக ளைத் தடுத்து, பொதுமக்கள் நலன் காக்க முடியும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்னதாக கோரிக்கை மனுவை ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலு வலர் ரவிக்குமாரிடம் ஊத்துக்குளி பேரூ ராட்சி முன்னாள் தலைவரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற் குழு உறுப்பினருமான ஆர்.குமார், குன் னம்பாளையம் கிளைச் செயலாளர் எஸ்.மாரிமுத்து மற்றும் புதுத்தோட்டம் ப.சண்முகம் ஆகியோர் அளித்தனர்.